சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் பாமக, வன்னியர் சங்கம் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் பாமக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமகவினர் - வீடியோ

    தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

    PMK to launch 20% Reservation for Vanniyars protest from Today

    இந்த போராட்டம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த டாக்டர் ராமதாஸ், சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நாம் நமது உரிமைக்காகவே போராடுகிறோம்; எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில் நமது கோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்

    PMK to launch 20% Reservation for Vanniyars protest from Today

    இந்த நிலையில் சென்னையில் இன்று காலை பாமக நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    English summary
    PMK will hold protest for 20% Reservation to Vanniyar's from Today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X