சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலை மாறு உலகில்....அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக? திமுக அணியா? தனித்து போட்டியா?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் பாமக இருப்பதையே அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடுத்தடுத்த அறிக்கைகள் மூலமாக சுட்டிக்காட்டி வருகிறார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாமக இடம்பெற்றது. திமுகவுக்கு இணையான ஒரு கட்சியாக பாமகவை அதிமுக அப்போது கருதியது. இதனால் டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்துக்கே அதிமுக தலைவர்கள் நேரில் சென்று விருந்து உபசாரத்தில் பங்கேற்றனர்.

வடதமிழகத்தில் பாமகவின் அரவணைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது அதிமுகவின் கணக்காக இருந்தது. ஆனால் லோக்சபா தேர்தல் முடிவுகள் இந்த கணக்கை தவிடுபொடியாக்கிவிட்டது. இருந்தபோதும் பாமகவை தொடர்ந்து தக்க வைக்கவே அதிமுக விரும்பியது.

அதிமுக அரசு மீது விமர்சனம்

அதிமுக அரசு மீது விமர்சனம்

இருப்பினும் பாமக மெல்ல மெல்ல அதிமுக அணியில் இருந்து விலகும் போக்கை வெளிப்படுத்தி வருகிறது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று 7.5% உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆளுநரை மிக கடுமையாகவே விமர்சித்திருந்தார். அதன்பின்னர் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கையோடு, , இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை..... செய்யவும் மறுக்கிறார்கள் என காட்டமாகவும் விமர்சித்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.

இடஒதுக்கீடு போராட்டம்

இடஒதுக்கீடு போராட்டம்

அத்துடன் புத்தாண்டு முதல் வன்னியர்களுக்கான 20% இடஒதுக்கீடு போராட்டத்துக்கு தயாராகுங்கள் எனவும் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இத்தனையும் அதிமுகவிடம் இருந்து பாமக விலகும் முடிவில் இருப்பதை தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. அப்படி அதிமுகவிடம் இருந்து வெளியேறும் பாமக, திமுக அணியில் ஐக்கியமாகுமா? அல்லது தனித்துப் போட்டியிடுமா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

பாமகவை வளைக்க திமுக தீவிரம்

பாமகவை வளைக்க திமுக தீவிரம்

அதிமுகவைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களைப் போல பாமகவை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. பாமகவின் எதிர்ப்பு அறிக்கைகளை அதிமுக கண்டும் காணாமலே கடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து பாமகவை அந்த கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் பாமக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை என திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது. இதனால் இரு கட்சிகளையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளையும் திமுக தலைவர்கள் மும்முரமாக மேற்கொண்டும் வருகின்றனர்.

பாமக தனித்து போட்டி?

பாமக தனித்து போட்டி?

இன்னொரு பக்கம், பாமக இம்முறை தனித்துப் போட்டியிடலாம்; அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்பதை முன்னிறுத்தி மீண்டும் ஒரு பலப்பரீட்சைக்கு பாமக தயாராகவும் வாய்ப்பிருப்பதாகவும் சில அரசியல் பார்வையாளர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said that PMK may leave AIADMK lead Alliance for the Tamilnadu Assembly Election 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X