• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மாஸ்டர் பிளான்.. 7 தொகுதிகளில் 6ல் திமுகவுடன் பாமகவை மோத விட்ட அதிமுக...!

|
    திமுக கூட்டணி Vs அதிமுக கூட்டணி.. எங்கெங்கு நேரடி போட்டி

    சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக - திமுக இரண்டு கட்சிகளும் 6 இடங்களில் நேருக்கு நேராக மோதுகிறது.

    லோக்சபா தேர்தல் களம் தமிழகத்தில் நாளுக்கு நாள் சூடாக்கிக் கொண்டே செல்கிறது. லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று காலை சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள் மற்றும் கூட்டணியில் இடம்பெறுள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கொங்கு மண்டலத்திலும் தெறித்து விளையாடும் அதிமுக.. 8 தொகுதிகளில் போட்டி.. திமுக 4 தான்!

    7 தொகுதிகள்

    7 தொகுதிகள்

    பாமக மொத்தம் அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தர்மபுரி, விழுப்புரம் (தனி), அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை பாமக போட்டியிடும் 7 தொகுதிகள் ஆகும்.

    ஒரே ஒரு தொகுதி

    ஒரே ஒரு தொகுதி

    இதில் பாமக ஒரே ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்கொள்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாமகவும் விழுப்புரம் தனி தொகுதியில் நேருக்கு நேர் மோதுகிறது. இங்கு விசிக சார்பாக அதன் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிட இருக்கிறார்.

    6 இடங்கள்

    6 இடங்கள்

    இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் மீதம் இருக்கும் ஆறு தொகுதிகளில் திமுகவை பாமக எதிர்கொள்கிறது. அதிமுகவும் - திமுகவும் மொத்தம் 8 தொகுதிகளில்தான் நேருக்கு நேர் சந்திக்கிறது. அதற்கு இணையாக பாமக - திமுக தற்போது மோதுகிறது.

    என்ன இடங்கள்

    என்ன இடங்கள்

    திமுக பாமக மோதும் இடங்கள்: தர்மபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் ஆகும். இங்கு யார் போட்டியிட போகிறார்கள் என்பதுதான் தற்போது பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

    அன்புமணி ராமதாஸ்

    அன்புமணி ராமதாஸ்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தர்மபுரி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இதனால் அவரை எதிர்த்து திமுக போட்டியிட உள்ளது அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

    வேல்முருகன் போட்டி

    வேல்முருகன் போட்டி

    அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவிற்கு இந்த தேர்தலை ஆதரவு அளிக்க உள்ளார். இவர் திமுகவிற்கு ஆதரவாக பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    PMK will face DMK in 6 constituencies of Lok Sabha elections 2019 in Tamilnadu.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more