கைவிட்டு போன "கீ".. சைலண்ட்டாக சட்ட போராட்டத்தில் வென்ற தீபா.. இபிஎஸ்ஸுக்கு எதிர்பார்க்காத "லாக்"!
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த.. ஜெயலலிதாவின் ஸ்டேடஸ் சிம்பிளாக பார்க்கப்பட்ட வேதா நிலையத்தை ஜெ. தீபா கைப்பற்றி இருக்கிறார். இன்று அவரின் கையில் வீட்டு சாவி கொடுக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா போலவே பால்கனியில் வந்து மக்கள் முன் கையசைத்தார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிக முக்கியமான அதிகார குறியீடாக பார்க்கப்பட்ட ஒன்று. இந்த வீட்டின் பால்கனியில் வந்து ஜெயலலிதா கை ஆசைப்பதை பார்க்கவே பல ஆயிரம் பேர் வரிசையில் நிற்பது வழக்கம்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் இந்த வேதா நிலைய வீட்டில் யார் இருப்பார் என்ற கேள்வி இருந்தது. சசிகலா குடியிருப்பாரா, ஜெ தீபா குடியிருப்பாரா, முதல்வர் இல்லமாக மாற்றப்படுமா என்று கேள்வி நிலவி வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பெயரில் இந்த வேதா நிலையம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது.
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பேருந்து நடத்துனர் கைது

வேதா நினைவு இல்லம்
ஜெயலலிதாவின் நினைவின் பெயரில் வேதா நினைவு இல்லமாக இது அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் எதிர்த்தனர். இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கும் தொடுத்தனர். அதில் நாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள். சட்டப்படி எங்களுக்கே அவரின் சொத்துக்கள் சேரும் என்று மனுவில் குறிப்பிட்டனர்.

வீடு வழக்கு
இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும். இந்த வீட்டை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

வேதா இல்லம்
அதில் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியது தவறு. இந்த இல்லத்தை மக்கள் வரிப்பணத்தில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. ஏற்கனவே மெரினாவில் ஜெயலலிதா நினைவாக அவரின் சமாதி உள்ளது. கூடுதலாக இன்னொரு நினைவு இல்லம் ஏன்? சட்டப்படி உள்ள வாரிசுகளுக்கே இந்த வீடு சென்று சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

போயஸ் கார்டன்
இதில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசு ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் மனுதாரா்கள் ஜெ. தீபா, ஜெ. தீபக் ஆகியோரிடம் வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று ஜெ. தீபாவிடம் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய வீடு ஒப்படைக்கப்பட்டது. இது சட்ட பூர்வமாக அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக திரும்பி உள்ளது.

அதிமுக
முதல் விஷயம், ஜெயலலிதாவின் ஸ்டேடஸ் சிம்பிளாக பார்க்கப்பட்ட ஒரு வீட்டை அதிமுக தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் போய்விட்டது. அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் போய்விட்டது. பெரிய அரசியல் பின்புலம் இல்லாமலே ஜெ தீபா சத்தமின்றி இந்த வீட்டை கைப்பற்றி இருக்கிறார். அதிமுக என்ற பெரிய கட்சி, அவர்களின் வழக்கறிஞர் அணி, அரசாணை என்று இத்தனை இருந்தும் ஜெ தீபா வென்று இருப்பது எடப்பாடிக்கு ஏற்பட்ட இழுக்காக பார்க்கப்படுகிறது.

அரசாணை
இரண்டாவது விஷயம், அரசு வெளியிட்ட அரசாணை பெரிய வலுவாக இல்லாமல் போனதையும் இது சுட்டிக்காட்டுகிறது. முறையாக விதிப்படி செயல்படாமல், அவசர கோலத்தில் இந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றிவிட்டார்கள் என்று விமர்சனம் வைக்கும் அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. வன்னியர் இடஒதுக்கீடு அரசு ஆணையும் இப்படித்தான் ஒன்றும் இல்லாமல் போனது என்பதால், முந்தைய ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

ஏமாற்றம்
மூன்றாவது விஷயம், எடப்பாடி மீது அதிமுக கட்சியினரே கொஞ்சம் ஏமாற்றம் அடையும் சூழ்நிலையையும் இது ஏற்படுத்தும். அரசாணை ஒன்றை எதிர்த்து ஜெ தீபா வென்றுவிட்டார். ஜெயலலிதா இருந்த போயஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டார். அதை இபிஎஸ்ஸால் தடுக்க முடியவில்லை என்ற பெயர் அதிமுகவிற்குள் எடப்பாடிக்கு எதிராக வந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆளுமை
இது அவரின் ஆளுமையை லேசாக மட்டுப்படுத்தும் விஷயமாக மாறும் வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே கட்சிக்குள் நிர்வாகிகள் சிலர் எதிர்த்து வருகிறார்கள். சசிகலா தரப்பு ஒரு பக்கம் தீவிரமாக எடப்பாடியை எதிர்த்து வரும் நிலையில் ஜெ தீபா சைலண்டாக எதிர்பார்க்காமல்.. போயஸ் கார்டன் கீ மூலம் எடப்பாடிக்கு லாக் வைத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்!