சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தீயாய் எரியும் 3 பிரச்சினைகள்.. ஒரே ட்வீட்.. மொத்தமாக கண்டித்த வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நிலவும் மூன்று முக்கிய விவகாரங்கள் பற்றி ஒரே ட்வீட்டில் தனக்கே உரித்தான பாணியில் கண்டனம் தெரிவித்துள்ளார், கவிஞர் வைரமுத்து.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனைகள் என்றால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், கந்தசஷ்டிகவசம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ ஆகியவைதான்.

நேற்று இந்த பட்டியலில், கோவையில் பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டதும் சேர்ந்துள்ளது.

பேசிட்டிருக்கும்போதே திடீரென பேசிட்டிருக்கும்போதே திடீரென "கழன்று" விழுந்ததால்.. சங்கோஜமடைந்த பெண் செய்தி வாசிப்பாளர்!

மூன்று பிரச்சினைகள்

மூன்று பிரச்சினைகள்

ஏற்கனவே, கொரோனா வைரஸ் பிரச்சினை, வேலையின்மை போன்ற பல்வேறு விவகாரங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து மூன்று முக்கியமான பிரச்சினைகள் வந்துள்ளன. அல்லது புகுத்தப்பட்டுள்ளன என்று கூட கூறலாம். ஒவ்வொரு விஷயத்துக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருக்குறள்

திருக்குறள்

லடாக் எல்லையில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறள் பற்றி பேசினார் மோடி. பின்னர் இரு தினங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் திருக்குறளின் பெருமை பற்றி தெரிவித்து இருந்தார். ஆனால் மற்றொரு பக்கம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு கண்டனங்கள் வெளியாகின.

பெரியார் சிலை அவமதிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு

இதனிடையில் கோவையில், நேற்று, பெரியார் சிலை அவமரியாதை செய்யப்பட்டது தொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ், அமைச்சர் ஜெயக்குமார், வைகோ மற்றும் திருமாவளவன் போன்ற பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக தரப்பிலிருந்து அமைச்சர்கள் பலரும் கந்தசஷ்டி விவகாரம் தொடர்பாக தங்களது கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மதநல்லிணக்கத்தை கெடுக்கக்கூடிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Recommended Video

    kandha Sasti Kavasam Issue : Karuppar Koottam-க்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள் | Oneindia Tamil
    வைரமுத்து

    வைரமுத்து

    இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து இன்று ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில் இந்த மூன்று பிரச்சினைகளையும், மொத்தமாக பேசியுள்ளார் வைரமுத்து. தனக்கே உரிய கவிதை பாணியில் இந்த கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
    "திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப் பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது." இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    English summary
    Poet vairamuthu condemns vandalized Periyar statue in Coimbatore and removing Thirukural from the syllabus and row over Kandha Sasti Kavasam and karuppar Koottam issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X