சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்னி எர்னாக்ஸ்..82வயதில் நோபல் பரிசு..பிரெஞ்சு தேசத்தின்மீது பூவெறிகிறேன்.. வைரமுத்து

Google Oneindia Tamil News

சென்னை: 2022ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்க்கு கவிஞர் வைரமுத்து தனது கவிதை வரிகளால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்! சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!

 இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. L Occupation என்ற நூலை எழுதியதற்காக ஆனி எர்னாக்ஸூக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனி எர்னாக்ஸ்

ஆனி எர்னாக்ஸ்

பாலின பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களை தைரியமாக பதிவு செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட அனுபவங்களில் இருந்து உண்மைகளை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்பட்டு வருகிறார்.

82 வயதில் நோபல் பரிசு

82 வயதில் நோபல் பரிசு

ஆனி எர்னாக்ஸ்க்கு 82 வயது ஆகிறது. இவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பல புத்தகங்கள் பிரான்சில் பள்ளி நூல்களாகவும் உள்ளன. சமூக வாழ்க்கை மற்றும் நவீன பிரான்ஸ் குறித்த ஆழமான பார்வையை வழங்கும் வகையில் இந்த புத்தகங்கள் உள்ளன. நோபல் பரிசு வென்ற ஆன்னி எர்னாக்ஸ்க்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வைரமுத்து வாழ்த்து

வைரமுத்து வாழ்த்து

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

ஆன்னி எர்னாக்ஸ்!

82வயதில் நோபல் பரிசு அதனாலென்ன?
சில பேருக்குத்
தாமதமாகத்தான் தலைநரைக்கும்

சுயசரிதையை நாவலாக்கிக்
கருக்கலைப்பையும்
கலைசெய்தீர்கள்;
மறக்கப்பட்டவர்களும்
மாதர்களுமே
உங்கள் படைப்பின் பலம்

வாழ்க

இந்தியாவின்
தமிழ்நாட்டிலிருந்து
பிரெஞ்சு தேசத்தின்மீது பூவெறிகிறேன்

என்று வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

English summary
Poet Vairamuthu congratulated the French writer Anne Ernaux who won the Nobel Prize for Literature for the year 2022 with his poetic lines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X