சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன சார்.. இப்படி கிளம்பிட்டீங்க.. சொல்லவே இல்லை.. சபாஷ் போட்டு பாராட்டுங்கய்யா!

கூட்ட நெரிசலில் நகைகள் திருட்டு நடக்கும் என்பதால் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: உண்மையிலேயே போலீஸை இந்த விஷயத்தில் நாம் பாராட்டியே ஆக வேண்டும். நாம மட்டுமல்ல தூத்துக்குடி மக்களும் கூட பாராட்டவே செய்றாங்க.

தீபாவளி வந்து விட்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் பர்ச்சேஸில் பிசியாக உள்ளனர். பொருட்கள் வாங்குவது, துணிமணி வாங்குவது, நகை வாங்குவது என மக்கள் அலைமோதிக் கொண்டுள்ளனர்.

இந்தநேரம் பார்த்து தூத்துக்குடி போலீஸார் சூப்பராக மீம்ஸ் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை நச்சென்று புகுத்தியுள்ளனர். பார்த்ததுமே மனசுக்குள் போலீஸுக்கு ஒரு சபாஷ் போட்டோம்.. நீங்களும் அதைப் பாருங்க.. நெகிழ்ச்சி ஆய்டுவீங்க.

திக்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?திக்.. திக்.. அதிமுகவும் இல்லை.. அமமுகவும் இல்லை.. தனி ஆவர்த்தனம் செய்ய சசிகலா திட்டம்?

திருடர்கள் ஜாக்கிரதை

பொது இடங்களுக்குச் செல்வோர், அதாவது துணிமணி வாங்கப் போவோர், நகை வாங்கப் போவோர் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த காமெடியான மீம்ஸ். வடிவேலு ரசிகர்கள் மறக்க முடியாத காமெடியாச்சே இது.

பார்த்து வெடிங்க

தீபாவளி வருவதால் பட்டாசுகளை கவனமாக கையாளவும். இந்த மீம்ஸில் இங்கிலீஷ்காரன் படத்தில் வரும் வெடிகுண்டு காமெடியைப் போட்டு கலக்கியுள்ளது தூத்துக்குடி போலீஸ்.

இப்படி கிளம்பிட்டீங்க

என்னங்க சார் எல்லா மாவட்ட காவல்துறையும் இப்படி கிளம்பிட்டீங்க. வாழ்த்துக்கள் என்று ஒரு பொது ஜனம் பதில் கொடுத்து பாராட்டியுள்ளார்.

உண்மைதான் ஐயா!

போலீஸ் போட்ட மீம்ஸுக்கு அதே பாணியில் பதில் கொடுத்துள்ளார் இந்த தங்கராஜ். உண்மையிலேயே போலீஸை இந்த விஷயத்தில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

English summary
It is normal for large numbers of thefts to take place using crowdfunding especially during diwali time. For this, Tamil Nadu police have tweeted for the safety of the people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X