சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸ் வாகனத்தில் கெத்தா.. இன்ஸ்டாவில் ரீல் விட்ட ’சஞ்சு’.. கொத்தாக தூக்கி கம்பி எண்ண வைத்த போலீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போலீஸ் வேனில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் பதிவிட்ட சட்டக் கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    இஸ்டாவில் ரீல் விட்ட ’சஞ்சு’.. கொத்தாக தூக்கி கம்பி எண்ண வைத்த போலீஸ்!

    சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் அத்துமீறி ஏறி பயங்கர ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குவது போல வீடியோ இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் CSF படை போலீசார் புதுவண்ணாரப் பேட்டை துறைமுக பொறுப்புக் கழக குடியிருப்பு பகுதியில் தங்கி வருகின்றனர்.

    விமானத்தில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் புதிய துபாய் பயண வீடியோ!விமானத்தில் சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் புதிய துபாய் பயண வீடியோ!

    காவல் வாகனம்

    காவல் வாகனம்

    அவர்கள் நீதிமன்றம் செல்வதற்காக பயன்படுத்தும் வாகனத்தில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் ஓட்டுநராக பணிபுரியும் நவீன் குமார் என்பவர் தினந்தோறும் காவல் வாகனத்தில் CSF போலீசாரை அழைத்து சென்று உயர்நீதிமன்றத்தில் இறக்கிவிட்டு மீண்டும் துறைமுக பொறுப்புக் கழகம் குடியிருப்பு வளாகத்தில் காவல் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.

     கத்தியுடன் ரீல்

    கத்தியுடன் ரீல்

    நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வாகனத்தில் 4 இளைஞர்கள் ரவுடி போன்று வேடமணிந்து வாகனத்தில் இறங்கி வருவது போன்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக பழைய வார்ப்பு பகுதியில் ரவுடி சந்தானம் கதாபாத்திரத்தில் இளைஞர் ஒருவர் கத்தி எடுத்து ரவுடி கும்பலை வெட்டி கொலை செய்வது போன்று காட்சிப்படுத்தி வீடியோ பதிவு செய்துள்ளனர்.

    இன்ஸ்டாகிராம்

    இன்ஸ்டாகிராம்

    அது உண்மை என்று பொதுமக்களை நம்ப வைக்கும்படியாக இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்தனர். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் காவல் வாகன ஓட்டுநர் நவீன் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ததனர்.

    அதிரடி கைது

    அதிரடி கைது

    இதுகுறித்து விசாரணை நடத்திய போது 'Sanju pa official' இன்ஸ்டாகிராம் ஐடியை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அம்பேத்கர் சட்ட கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் விக்னேஷ், மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சஞ்சய் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த பின்னர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    English summary
    2 people, including a law student, arrested by the police for taking a video of a police van with deadly weapons and posting it on Instagram reels ;பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் வேனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்களில் வெளியிட்ட சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X