சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேய் விடுடா.. அடிக்கட்டும்.. வாங்கிக்கலாம்.. அத்துமீறிய இளைஞர்கள்.. அள்ளி கொண்டு போன போலீஸ்

போலீசாருடன் வாக்குவாதம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போலீசாரிடம் அத்துமீறிய 4 இளைஞர்களின் வீடியோ

    சென்னை: "டேய் விடுடா.. அடிக்கட்டும்.. வாங்கிக்கலாம்" என்று பணியில் இருந்த போலீசாரிடம் அத்துமீறிய 4 இளைஞர்களின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    சென்னை நுங்கம்பாக்கம் சாலையின் இரு பக்கத்திலும் இரவு நேரங்களில் திருநங்கைகள் உலா வருவது தினமும் நடக்கும் சம்பவம் ஆகும்.

    இது சம்பந்தமாக போலீசார் அவர்களை அழைத்து பேசியும், அறிவுறுத்தியும் இந்த நடமாட்டம் இன்னும் குறையவில்லை.

    பால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்பால்குடி மாறாத குழந்தையின் வாயை பொத்தி பலாத்காரம்... மூச்சுத்திணறி உயிரிழந்த சோகம்

    திருநங்கை

    திருநங்கை

    இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு சென்னை பாண்டிபஜார் காவல்நிலைய சட்டம் ஒழுங்கு அலுவலர் கார்த்திகேயன், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சொகுசு கார் ஒன்றில் வந்த 4 இளைஞர்கள் திருநங்கைகளிடம் பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

    மதுபோதை

    மதுபோதை

    இதை பார்த்த கார்த்திகேயன், அவர்களை அங்கிருந்து கிளம்பும்படி சொல்லவும், மதுபோதையில் இருந்த 4 பேரும் தகராறில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் எல்லாம் வக்கீல்கள் என்று சொல்லி அங்கிருந்து போக மறுத்தனர். இதனால் போலீஸ், லத்தியை எடுத்து அவர்களை தாக்க முயன்றபோது, அதை இளைஞர்கள் தடுத்துள்ளனர்.

    உதவி

    உதவி

    தங்களை அடித்துவிடாதபடி 3 இளைஞர்கள் சேர்ந்து லத்தியை பிடித்து தள்ளி விடுகிறார்கள். பிறகு கார்த்திகேயனை சரமாரியாக அடித்து உதைத்துள்ளதாக தெரிகிறது. அவரிமிருந்த வாக்கி டாக்கியையும் பறித்து உடைத்து விட்டனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த கார்த்திகேயன், சக போலீஸ்காரர் குழந்தைவேலுவை செல்போனில் உதவிக்கு அழைத்தார். விரைந்து வந்த போலீசார், 4 பேரையும் உடனடியாக கைது செய்துள்ளனர். இது சம்பந்தமான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மிரட்டல்

    மிரட்டல்

    இளைஞர்கள் தாக்கியதால் காயமடைந்த கார்த்திகேயன், ஜிஆர்எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில், கைதானவர்கள் சுலைமான், ரிஸ்வான், முஹம்மது அக்பர், முகமது நவ்ஷத் என்பது தெரியவந்துள்ளது. அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இப்போது 4 பேருமே ஜெயிலில் உள்ளனர். இன்னொரு விஷயம்.. இவர்கள் 4 பேருமே வக்கீல்கள் இல்லையாம்.

    English summary
    Four youths were arrested in connection with a dispute with police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X