சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் ரூ2.25லட்சத்துக்கு மருந்து வாங்கி கொடுத்த கமிஷ்னர் விஸ்வநாதன்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாம்பலம் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சம் மதிப்பில் தடுப்பூசி வாங்கி கொடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேசகரம் நீட்டியுள்ளார்.

சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Police Commissioner AK Viswanathan Helped the vaccine to the Mambalam Police Station inspector

முதலில் ஐஐடியில் உள்ள சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக actemira tocilizumab எனும் மருந்தை பரிந்துரைத்தனர்.

இந்த தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. 3 நாட்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தனது சொந்த செலவில் மாம்பலம் இன்ஸ்பெக்டருக்கு அந்த மருந்தை சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் வாங்கி கொடுத்துள்ளார்.

முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?முதல் ஆளாக வந்தார்.. கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார்.. சுஷாந்த்சிங்கின் அந்த உதவியை மறக்க முடியுமா?

தந்போது இன்ஸ்பெக்டரின் உடலில் செலுத்தப்பட்டு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் மனிதநேய நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

English summary
chennai Police Commissioner AK Viswanathan has Helped the vaccine to the Mambalam Police Station inspector who was infected with coronavirus in Chennai at a cost of Rs 2.25 lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X