சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித்ஷா எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு.. பரபரப்பாக பேசிய மன்சூர் அலிகான்.. போலீஸில் புகார்

மன்சூர் அலிகான் மீது இந்து மக்கள் முன்னணி போலீசில் புகார் அளித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: "அமித்ஷா என்ன பண்ணார்.. நாலு வருஷமா தலைமறைவா எதுக்காக இருந்தாரு.. எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு.. எத்தனை கொலை பண்ணாரு" என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட மன்சூரலிகான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முகிலனை நேற்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். இதற்காக முதல் ஆளாக நாம் தமிழர் கட்சி பிரமுகரும், நடிகருமான மன்சூர் அலிகான் கோர்ட்டுக்கு வந்துவிட்டார். முகிலனை பார்ப்பதற்காக நீண்ட நேரம் அங்கு காத்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது:

"முகிலன் மேல பாலியல் புகாரா? ஒருத்தனுக்கு ஒருத்திதானே.. இவர் என்ன ஆயிரம் கோடி வெச்சிக்கிட்டு, பினாமியை போட்டுக்கிட்டு ஆடி கார்ல போயிட்டு இருந்தவரா? போராளிகளை கேவலப்படுத்ததான் இப்படி செய்யறாங்க?

அமித்ஷா

அமித்ஷா

அமித்ஷா என்ன பண்ணார்? ஊடகங்கள் எல்லாம் இங்க இருக்கீங்க இல்லை? நாலு வருஷமா தலைமறைவா ஏன் இருந்தாரு? எத்தனை குடும்பத்தை கெடுத்தாரு? எத்தனை கொலை பண்ணாரு? இந்த பாஜக ஆட்சியில நார்த் இந்தியாவில எத்தனை பாலியல் வன்கொடுமை செய்துட்டு இருக்காங்க?

படுகொலை

படுகொலை

இலங்கையில லட்சக்கணக்கான பாலியல் வன்கொடுமை செய்து, பச்சை படுகொலை பண்ணிட்டு இருக்காங்களே சிங்கள ராணுவ வீரர்கள்.. இந்த உலகம், இந்தியா முழுக்க என்ன பண்ணிட்டு இருந்துச்சு.. இது ஜனநாயகமா?

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

இந்த அனில் அகர்வாலை கொண்டு வந்து உதைக்கணும்.. அவன் எப்பேர்ப்பட்ட கேடி, எப்பேர்பட்ட கோடீஸ்வரனா இருந்தாலும் சரி, அனில் அகர்வால் பம்பாயில ஒரு சாதாரண காய்லாங்கடையில ஆரம்பிச்சு இன்னைக்கு இந்தியாவை விலைக்கு வாங்கிட்டு உட்கார்ந்திருக்கான். என் மண்ணை அழிக்கிறான். அவனை நாங்க விட மாட்டோம்.

உடைப்பேன்

உடைப்பேன்

ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிப்போர் இருக்கும் வரை மோசமான அரசியல்வாதிகள் இருக்கதான் செய்வார்கள். உள்ளாட்சி தேர்தல் மட்டும் ஒழுங்காக நடத்தவில்லை என்றால் வாக்கு செலுத்தும் இயந்திரத்தை கொளுத்தும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் கோளாறு இருக்கிறது. இதை டெல்லியில் நிரூபணம் செய்ய போகிறேன்." என்று கூறியிருந்தார்.

English summary
Hindu Makkal Munnani complaint on Nungambakkam Police Station over his controversy Speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X