சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆர்.எஸ். பாரதி கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 எம்எல்ஏக்கள் உட்பட 96 திமுகவினர் மீது வழக்கு பதிவு!

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கைதை கண்டித்து காலையில் போராடிய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கைதை கண்டித்து காலையில் போராடிய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று காலை செய்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என்று அவர் கூறிய பேச்சு ஒன்று சர்ச்சை ஆனது. இந்த பேச்சுக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் பேரவை தலைவர், கல்யாண், புகார் அளித்து இருந்தார்.

Police filed a case on DMK members those who Protested against R S Bharathi arrest

இந்த புகாரை தொடர்ந்து ஆர்.எஸ் பாரதி இன்று அதிகாலை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நடந்த அவசர விசாரணையில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

மே 31ம் தேதி வரை, இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்று காலை ஆர். எஸ் பாரதியை எழும்பூர் நீதிமன்றம் கொண்டு சென்ற போது திமுகவினர் சாலையில் நின்று போராடினார்கள். ஆர். எஸ் பாரதி கைதுக்கு எதிராக போராட்டம் செய்தனர். 100க்கும் அதிகமான திமுகவினர் சாலையில் குவிந்து போராட்டம் செய்தனர்.

தமிழக அரசுக்கும் போலீசாருக்கு எதிராக தீவிரமாக கோஷங்களை எழுப்பினார்கள்.திமுக எம்எல்ஏக்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று சென்னையில் இப்படி போராட்டம் செய்த பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆர். எஸ் பாரதி கைதை கண்டித்து காலையில் போராடிய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் உள்நோக்கம்.. திமுகவின் வழக்கறிஞர் அணிக்கு நன்றி.. ஜாமீனில் வெளியே வந்த ஆர். எஸ் பாரதி டிவிட்எல்லாம் உள்நோக்கம்.. திமுகவின் வழக்கறிஞர் அணிக்கு நன்றி.. ஜாமீனில் வெளியே வந்த ஆர். எஸ் பாரதி டிவிட்

எம்எல்ஏக்கள் ரங்கநாதன், ரவீந்தரன், ராஜா உள்ளிட்ட 96 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படுவது, சட்ட விரோதமாக கூடுவது, ஊரடங்கை மதிக்காமல் செயல்படுவது என்று வழக்கு பதியப்பட்டுள்ளது. எழும்பூர் போலீசார் இந்த வழக்கை பதிந்துள்ளனர்.

English summary
Police filed a case on DMK members those who Protested against R S Bharathi arrest today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X