சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ட்விஸ்ட் பாருங்க.. ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்! யாரு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுத்தது யார் என்பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு, இதைகண்டுபிடித்துள்ளனர் போலீசார்.

Recommended Video

    Rajinikanth வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவனின் தந்தை உருக்கமான மன்னிப்பு!

    காவல்துறை கட்டுப்பாட்டு அறையை நேற்று நண்பகல் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

    அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மேற்கொண்டு விவரம் கேட்ட போதே தொடர்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இந்த தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக ரஜினிகாந்த் வீட்டில் ஆய்வு நடத்தினர்.

     இந்தியப் பொருளாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் சீனப் பணம்.. இவ்வளவு குவிஞ்சு கிடக்கா?.. பரபர தகவல் இந்தியப் பொருளாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் சீனப் பணம்.. இவ்வளவு குவிஞ்சு கிடக்கா?.. பரபர தகவல்

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்த காவல்துறையினர் ரஜினிகாந்த் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லாததால் புரளியை கிளப்புவதற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் காவல்துறையினர் காவல்துறை கட்டுப்பாட்டுக்கு அழைத்த தொலைபேசி எண்ணை வைத்து புரளியை கிளப்பிய நபரை கைது செய்ய தீவிரம் காட்டினர்.

    ரசிகர்கள் குவிந்தனர்

    ரசிகர்கள் குவிந்தனர்

    இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியை நாடினர். ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு என்ற செய்தியறித்து அவரது ரசிகர்கள் போயஸ் கார்டன் முன்பு குவியத் தொடங்கினர். வெடிகுண்டு ஏதும் இல்லை திரும்பிச் செல்லுங்கள் என அவர்களை போலீஸார் அனுப்பி வைத்தனர்.
    ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை விரைந்து பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர் அவர் ரசிகர்கள்.

    அடடே, சிறுவனா

    அடடே, சிறுவனா

    கொரோனா பாதிப்புக்கு நடுவே, போலீசாரை இப்படி போயஸ் கார்டன் ஓட விட்டது யார் என்பது பற்றி தீவிர விசாரணை துவங்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடித்துள்ளனர் போலீஸ். பிடிபட்டது, கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் என தகவல். சைபர் கிரைம் போலீஸ் உதவியோடு இந்த புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதில், சிறுவன் சிக்கியுள்ளார்.

    அவசர அழைப்பு

    அவசர அழைப்பு

    அவரது போனிலிருந்துதான், 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்தாராம். தனது போனில் அழைப்புகள் எதுவும் போகாத நிலையில் 108க்கு போன் செய்துள்ளார் அந்த மாணவன். விசாரணையில், மாணவனுக்கு சற்று மனநலம் பாதிப்பு என தெரியவந்துள்ளது. எனவே, அவரை கைது செய்வதை தவிர்க்க கூடும் என தெரிகிறது.

    English summary
    With the help of cybercrime police, police have found who was behind bomb threat call to Actor Rajinikanth's home has been revealed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X