சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து தீவிரவாதி என சர்ச்சை பேச்சு.. கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு-வீடியோ

    சென்னை: இந்து தீவிரவாதி என சர்ச்சைக்குரிய வகையில் கமல்ஹாசன் பேசியதை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Police gives protection for Kamal Haasans house

    இந்த நிலையில் அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து நேற்று முன் தினம் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது பள்ளப்பட்டியில் அவர் பிரசாரம் செய்தபோது அவர் சர்ச்சை கருத்தை வெளியிட்டார்.

    கமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி!கமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி!

    அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.

    முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்துக்களை தீவிரவாதி என்பதா என விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கமல் வீட்டை இந்து அமைப்புகளும் வலதுசாரிகளும் முற்றுகையிடலாம் என தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    Police gives protection for Kamal Haasan's Alwarpet house as he delivered a controversial statement in Aravakkurichi election campaign.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X