சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிறைமாத கர்ப்பிணி.. ஓடோடி சென்று உதவிக்கரம் நீட்டிய ஆதம்பாக்கம் போலீஸ்.. சத்தமில்லாமல் ஒரு சபாஷ்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில், நேற்று இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர், கர்ப்பிணி பெண் மருத்துவமனைக்கு செல்ல உதவியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் காவலர்களின் பணி மகத்தானது. இன்றைக்கு சென்னையை தவிர பிற ஊர்களில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்பட போலீசும் முக்கிய காரணம். அவர்கள் கொரோனா பாதித்த தெருக்களில் உயிரை துச்சமென மதித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

Police in Adambakkam, Chennai, last night, assisted a pregnant woman to go to the hospital

அப்படி கண்காணிப்பில் ஈடுபட்ட நிறைய போலீசார் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஏராளமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினரும் கொரானாவால் பாதிக்கப்பட்டார்கள்.

இதற்கிடையே காவல் துறை உங்கள் நண்பன் என்று பொதுவாக சொல்வார்கள். அவர்கள் நிறைய நல்லது செய்தாலும் எதுவும் வெளியில் தெரியாது. ஆனால் ஏதேனும் தவறுகள் நடந்தாலும் மிகப்பெரிய அளவில் பூதாகரமாக்கப்படும் இதுதான் நிலை.

நேற்று சென்னை ஆதம்பாக்கத்தில் ,நேற்று இரவு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல்துறையினர், அந்த பகுதியில் தவித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து உதவி உள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த உதவியை பாராட்டி உள்ள திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் ஐபிஎஸ், டுவிட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்! மகாராஷ்டிராவுக்கு புதிய சோதனை.. திடீரென 200 கேரளா செவிலியர்கள் ராஜினாமா- பணிச்சுமை காரணமாம்!

அந்த பதிவில், போலீஸ் சட்டங்களை அமல்படுத்துகிறது, குற்றங்களைத் தடுக்கிறது, அவசர நிலைகளுக்கு பதிலளிக்கிறது, ஆதரவு சேவைகளை வழங்குகிறது. நண்பர், ஆசிரியர், ஆலோசகர், பாதுகாவலர், தேவதை என பல தொப்பிகளை அணிகிறார்கள். இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது என்றாலும், மனைவி, மகன் / மகள் என அவரது / தனிப்பட்ட / சமூக உறுதிப்பாட்டை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

English summary
Police in Adambakkam, Chennai, last night, assisted a pregnant woman to go to the hospital. A related video is going viral on social networks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X