சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யார் இந்த "கார்டன்" சிவா.. அன்று ஜெயலலிதாவுக்கு.. இன்று சசிகலாவுக்கு.. 2 நாளா பரபரக்கிறாரே!

சசிகலாவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: யார் இந்த கார்டன் சிவா.. இவர்தான் இப்போது சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு ஆன் இன் ஆல்.. இந்த தகவல்தான் மீடியாவில் 2 நாட்களாகவே பரபரத்து காணப்படுகிறது!

ரிலீஸ் ஆகி உள்ள சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை.. இப்போது பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று காரணமாக ட்ரீட்மென்ட்டில் உள்ளார்.. கூடிய சீக்கிரம் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.

 Police Protection for Sasikala in Victoria hospital Bengaluru

அநேகமாக இன்றுகூட அவர் சென்னை வரலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. எபபடியும் அவர் தமிழகம் வந்துதான் ஆக வேண்டும் என்பதால், அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கப்பட்டது... ஆனால், மத்திய அரசு அதற்கு இதுவரைக்கும் அதை பற்றி எந்த பதிலையும் சொல்லவே இல்லை.

அதனால், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த்திடம், சசிகலாவிற்கு பாதுகாப்பு வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.. இதை ஏற்ற நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், வழக்கமான பாதுகாப்பை சசிகலாவிற்கு வழங்கியுள்ளார்... இவர்கள் கொரோனா வார்டு உள்ள கட்டிடத்தின் 3 நுழைவு வாயில்களிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருந்தாலும், இந்த பாதுகாப்பு சசிகலாவுக்கு போதுமானதாக இல்லை என்று அவரது குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.. அதனால், தமிழகத்தில் சசிகலாவிற்கு பிரத்யேகமாக பாதுகாப்பை நியமிக்க முடிவு செய்தனர்.. அவர் பெயர்தான் கார்டன் சிவா.. இவர், ஏற்கனவே போய்ஸ் கார்டனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவராம்..

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, சிவா & கோ-வினர்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அதனால், இவர்களையே மறுபடியும் சசிகலாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவானது.. இதையடுத்து, சிவா தலைமையிலான 10 மெய்காப்பாளர்கள் பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டு, இப்போது அவர்கள் சசிகலாவிற்கும் பாதுகாப்பும் அளித்து வருகிறார்கள்.

English summary
Police Protection for Sasikala in Victoria hospital Bengaluru
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X