சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கை தாக்குதல் எதிரொலி.. சிஎஸ்கே போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.. சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடக்கும் சிஎஸ்கே - எஸ்ஆர்எச் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடக்கும் சிஎஸ்கே - எஸ்ஆர்எச் போட்டிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கையில் நேற்று முதல்நாள் பெரிய தொடர் குண்டுவெடிப்பு அசம்பாவிதம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு அதிகம்

பாதுகாப்பு அதிகம்

இந்தியா இலங்கை எல்லையிலும் பாதுகாப்பு அதிகமாக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகம் ஆகியுள்ளது. தமிழ்நாடு இலங்கை அருகே இருக்கும் பகுதி என்பதால் இங்கும் ஊடுருவல் நடக்க வாய்ப்புள்ளது என்று இங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி

இந்த சம்பவங்களுக்கு இடையில்தான் இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடக்கிறது.இதனால் தற்போது சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

எல்லா ரசிகர்களும் பலத்த சோதனைக்கு பின்பே போட்டியை காண அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ரசிகர்கள் எல்லோருடைய பைகள், கார்கள், பைக்குகள் எல்லாம் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. எப்போதும் சென்னை அணி விளையாடும் போது சிஎஸ்கே கேப்டன் தோனியை பார்க்க ரசிகர்கள் வேகமாக மைதானத்திற்குள் செல்வது வழக்கம். இப்போது அதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

என்ன நடவடிக்கை

என்ன நடவடிக்கை

அதையும் மீறி செய்யும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவிற்கு 100 போலீசார் என்று 1000 போலீசார் கூடுதலாக இன்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவும் தயார் நிலையில் உள்ளது.

English summary
Police protection increased in CSK match in Chennai after Sri Lanka bomb blast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X