சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பப்ஜி மதனுக்கு ஜாமீன் கூடாது.. வெளியே போய் மீண்டும் ஆபாச வீடியோக்களை ரிலீஸ் செய்வார்.. போலீஸ் கறார்

Google Oneindia Tamil News

சென்னை: யூடியூபர் பப்ஜி மதனுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸார் வாதம் செய்துள்ளனர்.

பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனினும் இந்த விளையாட்டை ஆன்லைனில் மதன்குமார் மாணிக்கம் என்பவர் விளையாடி வந்தார். 3 ஆண்டுகளுக்கு மேலாக தனது முகத்தையே காட்டாமல் ஆபாசமாக தனது யூடியூப் சேனலில் பேசி வந்தார்.

பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சிறுவர்கள் மதனின் பேச்சுக்கு அடிமையாகினர். இதனால் ரசிகர்கள் பட்டாளத்தை வளர்த்து கொண்ட மதனுக்கு யூடியூப் மூலம் வருமானம் வந்தது.

ஆபாசமாக பேசி கோடி, கோடியாக சம்பாதித்த.. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்! ஆபாசமாக பேசி கோடி, கோடியாக சம்பாதித்த.. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்!

பப்ஜி விளையாட்டு

பப்ஜி விளையாட்டு

இந்த வருமானம் மட்டுமல்லாமல் பப்ஜி விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களிடம் தான் ஏழைகளுக்கு உதவுவதாகவும் மதன் பொய் கூறி தனது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கேட்டதால் இளைஞர்களும் நல்ல காரியம்தானே என பணத்தை வாரி இரைத்தனர்.

 ஆபாசங்கள்

ஆபாசங்கள்

பணம் குவிய குவிய மதனின் ஆபாசங்களும் அதிகரித்தன. இதையடுத்து மோடி புகார்கள் மதன் மீது எழுந்தன. இதையடுத்து மதனையும் அவரது மனைவி கிருத்திகாவையும் போலீஸார் கைது செய்தனர். மதனின் வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாயை முடக்கினர். அவர்களது ஆடம்பர கார்களையும் பறிமுதல் செய்தனர்.

11 மாதங்கள் புழல் சிறையில்

11 மாதங்கள் புழல் சிறையில்

இதனால் குண்டாஸில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 மாதங்கள் புழல் சிறையில் உள்ளார். அவரது மனைவி ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் தன் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய தாமதமானதால் அது மதனுக்கு சாதகமாகி இரு வாரங்களுக்கு முன் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது.

11 மாதங்கள் புழல் சிறையில்

11 மாதங்கள் புழல் சிறையில்

இதனால் குண்டாஸில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 11 மாதங்கள் புழல் சிறையில் உள்ளார். அவரது மனைவி ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில் தன் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மதன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய தாமதமானதால் அது மதனுக்கு சாதகமாகி இரு வாரங்களுக்கு முன் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது.

ஆதாரங்களை கலைத்துவிடுவார்

ஆதாரங்களை கலைத்துவிடுவார்

குண்டாஸ் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் ஜாமீன் கிடைக்காமல் மதன் தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில் மதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என போலீஸார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வார். மேலும் அவருக்கு எதிரான ஆதாரங்களை கலைத்துவிடுவார் என போலீஸார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

English summary
Police refuses to give bail for PubG Madhan eventhough Gundas act cancelled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X