சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈழத் தமிழர் அகதி முகாம்களில் கருத்து கேட்ட 2 செய்தியாளர்கள் மீது வழக்கு

Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் அகதி முகாம்களில் கருத்து கேட்ட ஜூனியர் விகடன் இதழின் செய்தியாளர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை குறித்த கட்டுரைக்காக ஈழத் தமிழர் அகதிகளிடம் ஜூனியர் விகடன் இதழ் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து, புகைப்படக்காரர் ராம்குமார் ஆகியோர் மீது மார்த்தாண்டம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Police register cases aginst Reporters in Kanyakumari

மக்களிடம் பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல் குற்றப் பிரிவான 505 (1) பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 505 (1) பிரிவு ஜாமீனில் வெளிவிடமுடியாத பிரிவாகும்.

போலீசாரின் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என பத்திரிகையாளர் அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான் நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்- சீமான்

English summary
Kanyakumari Police had registered cases against two reporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X