சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- சிவசங்கர் பாபா மீது பாய்ந்தது போக்சோ சட்டம்! சிபிசிஐடிக்கு மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!

சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் தொல்லை புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்தும் பாலியல் தொல்லை புகார்கள் புற்றீசல்களாக கிளம்பி வருகின்றன.

 சுஷில் ஹரி பள்ளி

சுஷில் ஹரி பள்ளி

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியும் பாலியல் தொல்லை சர்ச்சையில் சிக்கியது. ஆனால் இந்த பள்ளியின் நிர்வாகியான சாமியார் சிவசங்கர் பாபா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

 குழந்தைகள் ஆணையம்

குழந்தைகள் ஆணையம்

இதனிடையே தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், சிவசங்கர் பாபா உள்ளிட்ட நிர்வாகிகளை விசாரணைக்கு அழைத்தது. ஆனால் இந்த விசாரணைக்கு சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. மேலும் சிவசங்கர் சார்பாக ஜானகி என்பவர் ஆஜராகி இருந்தனர்.

 நெஞ்சுவலி நாடகம்

நெஞ்சுவலி நாடகம்

சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கைதில் இருந்து தப்பிக்கவே சிவசங்கர் பாபா நெஞ்சுவலி நாடகமாடுவதும் அம்பலமானது.

 பாய்ந்தது போக்சோ

பாய்ந்தது போக்சோ

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன் சிவசங்கர் பாபா மீதான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றபப்ட்டுள்ளது.

English summary
The Chennai Kelambakkam Police Regitered a case against the Sivasankara Baba under POCSO act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X