சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாமல் விரட்டிய போலீஸ்.. கிருஷ்ணகிரி ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஜெயகோபால்.. அதிரடி கைது

ஒகேனக்கல்லில் ஜெயகோபால் இருப்பதாக துப்பு கிடைத்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    எங்கே போனார் ஜெயகோபால்..போலீசார் தீவிர வேட்டை-வீடியோ

    சென்னை: சென்னை: தமிழக போலீசாரின் தீவிரமான 2 வார கால தேடுதல் வேட்டைக்கு பிறகு, சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி ஜெயகோபால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
    சுபஸ்ரீ இறந்து இத்தனை நாள் ஆகியும், சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலரை பிடிக்க முடியாமல் இருந்தது. சுபஸ்ரீ இறந்த தினம் முதலே இவர் காணாமல் போய்விட்டார்.

    இவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.. மாயமான இவரை கண்டுபிடிக்கவும் தனிப்படையும் ஜெயகோபாலை பிடிக்க பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. எனினும் இவரை கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்தது.

     ஹைகோர்ட்

    ஹைகோர்ட்

    நாக்கை பிடுங்கி கொள்வது போல் ஐகோர்ட் கேள்வி கேட்கவும்தான் தேடுதல் வேட்டை படு விரைவானது. "முக்கிய குற்றவாளி ஜெயகோபாலை ஏன் கைது செய்யவில்லை, அவரும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா" என்று கேள்வி கேட்கவும், "விரைவில் கைது செய்யப்படுவார்" என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்தது.

     தனிப்படை

    தனிப்படை

    இதையடுத்துதான், நேற்று, பள்ளிக்கரணையில் பேனரை அகற்றாத இன்ஸ்பெக்டர் மீது தமிழக அரசு துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றொரு புறம், மேலும் தனிப்படைகள் அதிகரிக்கப்பட்டு ஜெயகோபாலை பிடிக்க ஆயத்தமானார்கள். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் ஜெயகோபால் வீட்டிலும் நோட்டிஸ் ஒட்டினார்கள்.

     ஒகேனக்கல்

    ஒகேனக்கல்

    இந்நிலையில், ஜெயகோபால் ஒகேனக்கல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. இதற்காகவே 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஆளுக்கு ஒரு டீமாக பிரிந்து ஜெயகோபாலை தேடும் பணியில் இன்று ஈடுபட்டனர்.அங்கிருக்கும் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தெரிந்தவர்களின் வீடுகளில் ஜெயகோபால் மறைந்து இருக்கலாம் என்பதால் தீவிரமாக தேடி வந்ததால், முக்கிய குற்றவாளியை கிட்டத்தட்ட நம் போலீசார் நெருங்கி விட்டதாகவே கருதப்பட்டது.

     பரபரப்பு

    பரபரப்பு

    இந்நிலையில், தற்போது கிருஷ்ணகிரியில் ஜெயகோபாலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இரு வாரங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி வந்த ஜெயகோபால் தற்போது கைதாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     சபாஷ் போலீஸ்

    சபாஷ் போலீஸ்

    ஆளும் தரப்பை சார்ந்த நபர் என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, ஜெயகோபாலை கைது செய்துள்ளது, போலீசார் மீதான மக்களின் நம்பிக்கையையும் பிடிப்பையும், நெருக்கத்தையும் மேலும் அதிகமாக்கி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மகளை பறிகொடுத்து கலங்கி கொண்டிருக்கும் அந்த ஜீவன்களுக்கு, இந்த குற்றவாளியின் கைது நடவடிக்கை ஒரு சொற்ப ஆறுதலை தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Police Team have arrived to Hoganekkal and Trichy to arrest AIADMK former Councilor Jayagopal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X