சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குஷ்பு வீட்டுப் பக்கம்.. கமுக்கமாக நின்றிருந்த கன்டெய்னர் லாரி.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: குஷ்பு வீட்டருகே 10 நாட்களாக நின்றிருந்த கன்டெய்னர் லாரியை புகாரின் பேரில் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நடிகை குஷ்பு சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது வீட்டருக்கே ஒரு கன்டெய்னர் லாரி 10 நாட்களாக நிற்கிறது. அதில் நம்பர் பிளேட் கூட இல்லை என கூறப்படுகிறது.

அந்த லாரியை நடிகை குஷ்பு படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த 10 நாட்களாக நான் வசிக்கும் தெருவின் முனையில் இந்த கன்டெய்னர் லாரி நின்றுக் கொண்டிருக்கிறது. இது குறித்து ஒருவரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

ட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு ட்ரம்ப்பிடமிருந்து, வட கொரிய அதிபருக்கு போன 'தனிப்பட்ட கடிதம்..' அசாதாரண தைரியம்.. கிம் குதுகலிப்பு

சென்னை போக்குவரத்து

சென்னை போக்குவரத்து

நம்பர் பிளேட் கூட இல்லாத லாரியால் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த லாரி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸுக்கும் பதிவை அனுப்பியிருந்தார். அதில் சென்னை போக்குவரத்து துறை எந்த பகுதியில் வாகனம் நிற்கிறது என்பது குறித்த தகவல்களை கேட்டுள்ளனர்.

வாகனம்

அதற்கு குஷ்பு, எனது புகாருக்கு உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி, பாராட்டுக்குரியது என கூறிய குஷ்பு அந்த வாகனம் நின்று கொண்டிருக்கும் இடத்தையும் தெரிவித்துள்ளார்.

போலீஸ்

போலீஸ்

இதையடுத்து குஷ்புவின் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் வாகனத்தின் உரிமையாளர் குறித்தும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தகவல்

தகவல்

இதுகுறித்து குஷ்புவுக்கு சென்னை டிராபிக் போலீஸ் அனுப்பியுள்ள டுவீட்டில் உங்கள் பகுதியில் நின்றிருந்த வாகனத்தை பறிமுதல் செய்து விட்டோம். ஜி.சி.டி.பி. செயலி மூலம் புகாரளிக்குமாறு குஷ்புவுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

English summary
Chennai Traffic Police seized Container Lorry which was parked near Kushboo's house for 10 days without any number plate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X