சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. சென்னை மாணவர் தலைமறைவு.. தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சென்னை மாணவர் உதித் சூர்யா தலைமறைவாகியுள்ள நிலையில் அவரையும் அவருக்காக தேர்வு எழுதிய மாணவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி சேர்க்கைக்காக நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில் சேரமுடியும். இந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

அதில் சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி, தேனி கல்லூரியில் சேர்ந்திருப்பதாக கல்லூரி முதல்வருக்கு புகார் வந்தது. இதையடுத்து 4 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழுவை மருத்துவமனை கல்லூரி அமைத்தது.

என்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்என்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்

மும்பையில் தேர்வு

மும்பையில் தேர்வு

இதையடுத்து உதித் சூர்யா மற்றும் மருத்துவரான அவரது தந்தையிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சென்னையில் 2 ஆண்டுகளாக தேர்வு எழுதியதில் தோல்வி அடைந்ததால் மும்பையில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

தேர்ச்சி

தேர்ச்சி

மேலும் பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் உள்ள படமும், மாணவரின் உண்மையான தோற்றமும் வேறு மாதிரி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 385 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதும் தெரியவந்தது.

9-ஆம் தேதி

9-ஆம் தேதி

இந்த நிலையில் ஈமெயில் மூலம் புகார் அளித்தவர், உதித் சூர்யாவுடன் பயிலும் மாணவர் என்றும் கூறப்படுகிறது. 11-ஆம் தேதி புகார் வந்த நிலையில் 13-ஆம் தேதி விசாரணை நடத்தப்பட்டது. எனினும் மன அழுத்தம் காரணமாக கல்லூரியிலிருந்து விலகுவதாக உதித் சூர்யா 9-ஆம் தேதியே கடிதம் எழுதியுள்ளார்.

தலைமறைவு

தலைமறைவு

மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின்பேரில் உதித் சூர்யா உள்பட 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கண்டனூர் போலீஸார் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

English summary
Kandanur Police sets up special force to find out the Chennai student who impersonates Neet Exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X