சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலியோ சொட்டு மருந்து முகாம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்.. கொரோனா குழந்தைகளுக்கு அலார்ட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. இதில் ஐந்து வயதுக்கு உள்பட் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் மையங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று உங்கள் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்தை தவறாமல் கொடுங்கள். போலியோ நோயை ஒழிக்க முக்கியமானது இந்த சொட்டு மருந்து.

Recommended Video

    தாய்மார்களே போலியோ சொட்டு மருந்து போட போங்க…மாலை 5 மணிவரை நடைபெறும்!

    இதனிடையே கொரோனா பாதித்துள்ள குழந்தைகள் போட்டுக் கொள்ள கூடாது என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பாதிக்காத அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

    Polio vaccination camp in Tamil Nadu today: Give compulsion to your children

    தமிழகம் முழுவதும் இன்று 43 ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்து வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் பழனிசாமி இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள், நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Polio vaccination camp in Tamil Nadu today: Give compulsion to your children

    காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்த பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளார்கள. மேலும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது..

    அனைத்து மையங்களிலும் கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. .சென்னையில் மட்டும் 1,644 சொட்டு மருந்து மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஐந்து வயதுக்குள் உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் மறக்காமல் அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்து கிடைக்க வழிவகை செய்யுங்கள்.

    English summary
    Polio vaccination camps are being held across Tamil Nadu today. The Government of Tamil Nadu has set a target to provide 70.26 lakh children under the age of five. Go anywhere in 43,000 centers across Tamil Nadu and give your child polio drops regularly. These drops are important to eradicate polio.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X