சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரனை விட்டு விலகும் வலதுகரம்... வலைவிரித்துக் காத்திருக்கும் பாஜக.. அவர் வருவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் வலதுகரமாக திகழும் சென்னை பிரமுகருக்கு பாஜக வலை விரித்திருப்பதாக தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காலம் முதலே அந்த சென்னை பிரமுகருக்கு நல்ல ஏறுமுகம்தான். ஜெயலலிதா, சசிகலாவிடம் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தார்.

சிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்! சிபிஎஸ்இ பாடங்கள்- பாஜக மீது மு.க.ஸ்டாலின் திடீர் அட்டாக்- நோட்டாவை தாண்டுவதை கூட மறந்துவிடலாமாம்!

தினகரனுக்கு வலது கரம்

தினகரனுக்கு வலது கரம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் முதன்மை தளபதியாக கோலோச்சினார். சசிகலாவின் சிறைவாசத்தால் தினகரன் 'சாருக்கு 'எல்லாமுமாக வலதுகரமாக திகழ்ந்தார். தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் வெல்வதற்கு இந்த பிரமுகர்தான் காரணம். களப்பணியாற்றுவதில் கில்லாடி.

ஜெ.வின் அப்பல்லோ மர்மங்கள்

ஜெ.வின் அப்பல்லோ மர்மங்கள்

ஜெயலலிதாவின் அப்பல்லோ சிகிச்சை தொடர்பான ரகசியங்கள் நிறையவே தெரிந்தவர். இவர்தான் சில போட்டோக்களையும் வெளியிட்டவர். தினகரனின் முகாமில் இருந்து பலரும் கொத்து கொத்தாக வெளியேறிய போதும் இவரும் தாவப் போகிறார் என கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி தினகரனுடனேயே இருந்தார்.

கொரோனா உதவிகள்

கொரோனா உதவிகள்

கொரோனா காலத்தில் அத்தனை கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு மக்களுக்கு பணியாற்றின. ஆனால் தினகரன் தரப்பில் அறிக்கைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டிய சென்னை பிரமுகர் ஆர்.கே.நகரில் கட்டாயம் இறங்கி பணி செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பார்த்தார். அப்போதுதான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும் என்றார்.

தினகரன் தனி பாதை?

தினகரன் தனி பாதை?

ஆனால் தினகரனின் மூவ்கள் வேறு மாதிரியாக இருந்ததாக நினைத்துக் கொண்டார் சென்னை பிரமுகர். அதற்கேற்ப சசிகலா வெளியே வருகிறார்; அதிமுக அணிகள் இணைகிறது என்றெல்லாம் செய்திகளும் வெளியாகின. இதில் தமக்கு முழுமையாக உடன்பாடு இல்லை என்பதாக சென்னை பிரமுகர் தினகரன் தரப்புக்கு சொல்லிவிட்டாராம்.

வலைவிரிக்கும் பாஜக

வலைவிரிக்கும் பாஜக

இந்த நிலையில்தான் பாஜக தரப்பு, சென்னை பிரமுகருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறதாம். ஆனால் சென்னை பிரமுகர் தரப்போ, எந்த ஒரு பிடியும் கொடுக்காமல் அவர்கள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார். தம்மால் திமுகவில் இணைய முடியாது; அதிமுகவில் மீண்டும் ஒட்ட முடியாது; தாய் கட்சியான காங்கிரஸும் வேண்டாம் எனில் இருப்பது ஒரே வாய்ப்பு பாஜக மட்டும்தானே என நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் அந்த சென்னை பிரமுகர்.

English summary
Here is a Political gossip on AMMK party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X