சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களை காக்கும் நைட்டிங்கேல்கள்...நோயாளிகளிடம் தாயன்புடன் சேவை... உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்!

Google Oneindia Tamil News

சென்னை: நோயாளிகளிடம் தாயன்பு காட்டி சேவையாற்றும் செவிலியர்களை போற்றும் விதமாக உலக செவிலியர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

Recommended Video

    இன்று 'மாண்புமிகு' செவிலியர் தினம் கொரோனா பணியில் 'விளக்கேந்திய சீமாட்டிகள்'!

    செவிலியர் பணியில் தம்மை அர்ப்பணித்து பெரும் போற்றுதலுக்குரியவராக திகழ்ந்தவர் நைட்டிங்கேல் அம்மையார். நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1974-ம் ஆண்டு முதல் உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு நைட்டிங்கேல் அம்மையாரின் 200-வது பிறந்த நாள் ஆண்டு. இன்றைய உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி:

    Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ் Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ்

    அர்ப்பணிப்பு

    அர்ப்பணிப்பு

    அன்னையரைப் போல் பரிவோடு தன்னலம் கருதாது மக்களைக் காக்கும் மகத்தான சேவைபுரியும் செவிலியர்கள் நல்ல உடல்நலத்தோடு நலம்பெற்று வாழ எனது அன்பார்ந்த உலக செவிலியர் தின வாழ்த்துகள்! இக்கொரோனா காலத்திலும் இரவுபகல் பாராமல் அயராது சேவையாற்றும் செவிலியர்களின் அர்ப்பணிப்பிற்கு தலைவணங்குகிறேன். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

     நோயாளிகளிடன் தாயன்பு

    நோயாளிகளிடன் தாயன்பு

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி: மருத்துவத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து, நோயாளிகளிடம் தாயன்பு காட்டி எந்தச்சூழ்நிலையிலும் இன்முகத்தோடு சேவையாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த செவிலியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பணி ரீதியாக தங்களுக்குள்ள மனக்குறைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தங்கள் உயிரைப் பணயம் வைத்து தியாக உள்ளத்தோடு கொரோனா சிகிச்சைப்பணியில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்கள் என்றைக்கும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

     கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்

    கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்

    இந்த நேரத்தில், தமிழகத்தில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருதல் ஆகியவையே செவிலியர்களுக்குச் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

     செவிலியம் மகத்தான சேவை

    செவிலியம் மகத்தான சேவை

    தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செவிலியர் தின செய்தியில், நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12 ஆம் தேதியை, உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் பணி என்பது தொழில் அல்ல! ஊதியம், ஜாதி,மதத்திற்கு அப்பாற்பட்டு,தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத்தன்மையும் கொண்டு தொண்டு ஆற்றும் மகத்தான சேவையாகும்.

     நைட்டிங்கேல்களாக செவிலியர்கள்

    நைட்டிங்கேல்களாக செவிலியர்கள்

    உலகமெங்கும் கொரோனா பரவியிருக்கும் இந்த காலகட்டத்தில், மக்களை காக்கும் நைட்டிங்கேல்களாக,தேவதைகளாக ஒவ்வொரு செவிலியரும், இரவு பகல் பாராமல் தங்கள் குடும்பங்களை கூட கவனிக்காமல் நோயாளிகளுக்காக பணியாற்றி வருகிறார்கள். இந்த பணியானது, எந்த ஒரு செயலுக்கும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு சேவையாகும். இத்தகைய சேவையை போற்றி தலை வணங்குகிறேன். மேலும், உலக செவிலியர் தினத்தில் செவிலியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

    உயிரைத் துச்சமென நினைத்து

    உயிரைத் துச்சமென நினைத்து

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி: உலகமே கொரோனா போர்க்களமாக மாறியுள்ள சூழலில், தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, தாயுள்ளத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தி.மு.க சார்பில் #InternationalNursesDay நல்வாழ்த்துகள்! செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற தி.மு.க என்றும் துணை நிற்கும். இவ்வாறு மு.க.ஸ்டாலி கூறியுள்ளார்

    English summary
    International Nurses Day is celebrated on May 12 to commemorate the birth anniversary of Florence Nightingale.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X