சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிற்காக இன்னுயிர் ஈந்த தமிழக ராணுவ வீரர் பழனி... முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்

Google Oneindia Tamil News

சென்னை: லடாக் எல்லை பகுதியில் நடந்த மோதலில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்;

political ledares condolence to military man palani death

லடாக் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரர் திரு.பழனி அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;

லடாக் எல்லையில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லையில் நுழைந்து இந்தியா பதற்றத்தை தூண்டுகிறது.. சீனா போடும் டிராமாஎல்லையில் நுழைந்து இந்தியா பதற்றத்தை தூண்டுகிறது.. சீனா போடும் டிராமா

இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்;

சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம்.

English summary
political ledares condolence to military man palani death
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X