சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லகண்ணு 94 வயது அரசியல்வாதி.. மாற்று வீடு ஒதுக்காமல் வெளியேற்றியது தவறு.. அரசியல் கட்சிகள் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: நல்லகண்ணுவுக்கு மாற்று வீடு ஒதுக்காமல் வெளியேற்றியது தவறு என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது பழுத்த அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் வாடகைக்கு குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு இந்த குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Political Parties condemns to make vacate Nallakannu

இந்நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையடுத்து நல்லகண்ணு வீட்டை காலி செய்தார். வேறு வீட்டை ஒதுக்காமல் நல்லகண்ணுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் எழுப்பியுள்ளன. இதுகுறித்து அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் நல்லகண்ணு, தியாகி கக்கனின் மகனுக்கு வேறு இடத்தில் அரசு வீடு ஒதுக்கி தர வேண்டும்.

வாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை வாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை

மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது. தியாகி கக்கனின் மகனுக்கு மாற்று வீடு ஒதுக்கி தராமல்அரசு நடவடிக்கை மேற்கொண்டது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில் மூத்த தலைவர் நல்லகண்ணுவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியது கண்டனத்திற்குரியது

நல்லகண்ணுக்கு குடியிருப்பு ஒதுக்காமல் மற்றவர்களை போன்று வெளியேற்றியது கண்டனத்திற்குரியது. நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு உடனடியாக வேறு குடியிருப்பை ஒதுக்கித்தர வேண்டும் என்றார் ஜவாஹிருல்லா.

English summary
Political Parties condemns Tamilnadu Government for giving notice to Nallakannu to vacate Government house without allotting new one.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X