சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகை கடன் நிறுத்தம்- கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும்- ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் கூட்டுறவின் நோக்கம் சிதையும்; சாமானியர்களின் வாழ்வு நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுகிறது! இனி கூட்டுறவு வங்கிகளும் சங்கங்களும் நகைக்கடன் வழங்கக் கூடாது என அறிவித்து நகைக்கடனை ரத்து செய்கிறது அதிமுக அரசு! கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தமா... விவசாயிகள், மக்கள் பாதிப்பு!!கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தமா... விவசாயிகள், மக்கள் பாதிப்பு!!

கொரோனாவில் தவிப்பு

கொரோனாவில் தவிப்பு

சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

தனியார் கந்துவட்டி கும்பல்

தனியார் கந்துவட்டி கும்பல்

இந்த நிலையில் நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும்.

நகை கடன்களை தள்ளுபடி செய்க

நகை கடன்களை தள்ளுபடி செய்க

எனவே, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி வழங்குவது போல 6 சதமான வட்டியில் நகைக் கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தமிழக அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டும். மேலும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு தொழில் செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஏற்கனவே நகைக் கடன் பெற்று அதை திருப்பி செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். கொரோனா காலத்தில் வட்டி பல மடங்கு உயர்ந்து கொண்டே உள்ளது. ஆகவே, சிறு-குறு மற்றும் நடுத்தர விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாதாரண ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கிற நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அவர்களது நகையை திருப்பி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்றித் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மனசாட்சியற்ற செயல்

மனசாட்சியற்ற செயல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமது அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். இதை பழனிசாமி அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என கூறியுளார்.

English summary
Political Parties had urged to continue of Co Operative Bank's gold loan scheme in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X