சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகன்களுக்காக பாடுபடும் அப்பாக்கள்.. தொகுதிக்குள்ளேயே முடங்கி போன தலைவர்கள்.. இது விசித்திர தேர்தல்

மகன்களின் வெற்றிக்காக அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: மகன்களுக்காக படாதபாடுபட்டு சீட் வாங்கியது ஒரு சமாச்சாரம் என்றால் அதைவிட அவர்களின் வெற்றிக்காக நாளெல்லாம் உழைப்பது அதைவிட பெரிய விஷயமாக இருக்கிறது கட்சி தலைவர்களுக்கு!

ஆனால் இதை பற்றியெல்லாம் கவலைப்படாத "தகப்பன் தலைவர்கள்" மகன்களின் வெற்றிக்காக மட்டுமே தொகுதிக்குள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். கூட்டணி கட்சியை விடுங்க.. தன் கட்சி வேட்பாளர்களுக்காககூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என நகராமல் மகன்களுக்காகவே பிரச்சாரத்தில் மும்முரமாகி உள்ளார்களாம்.

ஐயா, பெரிய ஐயா.. ரொம்ப மகிழ்ச்சி.. ஆனா பாமகவை முதலில் சட்டசபைக்கு அனுப்பியது யார்.. ஸ்டாலின் கேள்வி ஐயா, பெரிய ஐயா.. ரொம்ப மகிழ்ச்சி.. ஆனா பாமகவை முதலில் சட்டசபைக்கு அனுப்பியது யார்.. ஸ்டாலின் கேள்வி

மகன் ரவீந்திரநாத்

மகன் ரவீந்திரநாத்

தன் தொகுதியில் முடிந்த அளவுக்கு மகன் ரவீந்திரநாத்துக்கு ஒரு வீடு விடாமல் வாக்கு கேட்டபிறகுதான் அடுத்த தொகுதிக்கே சென்றார் ஓபிஎஸ். இதனால் கட்சிக்குள் நிறைய அதிருப்தி ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது.

ப சிதம்பரம்

ப சிதம்பரம்

இப்போது அதுபோலவே மகனுக்காக வாக்கு கேட்டு கொண்டிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். எத்தனையோ இழுபறிக்கு பிறகு கட்சி தலைமை தலையிட்டுதான் மகனுக்காக சீட் வாங்கினார். அதனால் கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தொகுதியிலேயே முகாம் இட்டுள்ளார்.

அதிருப்திகள்

அதிருப்திகள்

ப.சிதம்பரம் வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் செல்வது கிடையாது என்று ஏற்கனவே ஒரு பேச்சு அங்கு நிலவிவருகிறது. ஆனால் மகனுக்காக மட்டும் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று அரசல்புரசலான பேச்சு எழுந்துள்ளது. இது மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் கடுப்பை தந்துள்ளது.

வேலூர்

வேலூர்

இப்படித்தான் திமுக பொருளாளர் துரைமுருகனும். மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் தொகுதியில் மட்டுமே தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு துரைமுருகனின் பிரச்சாரம் எத்தனையோ திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு ஒரு காரணமாகவே இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு நல்ல பேச்சாளரான துரைமுருகனும் வேலூரை தாண்டவில்லை என்பது திமுக தொண்டர்களிடையே பெருத்த அதிர்ச்சிதான்.

கட்சி தலைவர்கள்

கட்சி தலைவர்கள்

இதுபோக, கட்சிகளின் மிக மிக தலைவர்கள் என்று சொல்லப்பட்ட தமிழிசை சவுந்தராஜன், எச்.ராஜா, திருநாவுக்கரசர், கனிமொழி, ஈவிகேஎஸ் இளங்கோவன், பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் போன்றோர்.. தங்களது வெற்றிக்காகவே உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை பற்றி சிந்திப்பது குறைவாகவே இருக்கிறதாம்!

விசித்திர தேர்தல்

விசித்திர தேர்தல்

இந்தத் தேர்தலில் முதல் முறையாக முக்கியத் தலைவர்கள் எல்லாம் குறிப்பிட்ட தொகுதிகளுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள் என்பது மிகுந்த விசித்திரமான விஷயமாகும். இதனால்தான் திமுக - அதிமுக என எல்லாக் கட்சிகளிலும் பிரச்சாரத்திற்கு முக்கியத் தலைவர்கள் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கலகலப்பும் குறைந்து காணப்படுகிறது.

English summary
Political party leaders are campaigning for their sons. It is therefore impossible to campaign for other constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X