• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சார்பட்டா பரம்பரை.. பசுபதி பேசுன "வசனத்தை" கவனிச்சீங்களா.. பா.ரஞ்சித்தின் "பஞ்ச்" அரசியல்

Google Oneindia Tamil News

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் , "டான்சிங் ரோஸ்" சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள "சார்பட்டா பரம்பரை" திரை விருந்து, சினிமா ரசிகர்கள் மத்தியில் கடந்த இரு நாட்களாக பெரும் ஆர்வத்தையும், அதோடு சேர்ந்து சில விவாதத்தையும் சேர்த்து எழுப்பியுள்ளது.

  அழுத்தம் திருத்தமாக Pa Ranjith பேசிய அரசியல்.. Sarpatta Paramabarai பட பின்னணி!

  1970களில் சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தை அந்தக் காலத்துக்கே, அழைத்துச் செல்லக்கூடிய ஆர்ட் வொர்க் மூலமாக சிறப்பாக செய்துள்ளது படக்குழு.

  மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

  குத்துச்சண்டை படம் முழுக்க வந்தாலும் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு திரைக்கதையை இயக்கி பா. ரஞ்சித் சபாஷ் பெற்றுள்ளார்.

  தனி முத்திரை

  தனி முத்திரை

  குத்துச்சண்டை.. அதுதொடர்பான பகை.. அதுதொடர்பான நுணுக்கங்கள் என , சேவல் சண்டையை வைத்து ஆடுகளம் படம் இயங்கியதைபோல, சார்பட்டா, சென்றாலும் கூட, ரஞ்சித் தனது தனி முத்திரையை அரசியல் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலமாக படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் என்றுதான், சொல்லவேண்டும்.

  பசுபதி கேரக்டர்

  பசுபதி கேரக்டர்

  இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகன் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பசுபதியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. தனது கண் அசைவு மூலமாக ஒட்டுமொத்த காட்சியின் அடர்த்தியையும், அவர் பார்வையாளர்களுக்கு கடத்தி விடுகிறார். இப்படியான ஒரு முக்கிய கதாபாத்திரம் திமுக காரராக சித்தரிக்கப்பட்டுள்ளது. பாத்திரத்தின் பெயர் ரங்கன் வாத்தியார்.

  கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

  கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

  இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு எமர்ஜென்சி நிலையை பிரகடனப்படுத்தியது மற்றும் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, ஆகியவையும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆட்சி கலைக்கப்படும் முன்பாக, அவசரநிலைகாலத்தில் தேடப்பட்ட பல தலைவர்கள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பாக இருந்தனர். சஞ்சீவ ரெட்டி ஒருமுறை,"என்னுடைய சொந்த ஊரான அனந்தப்பூரில் அவசரநிலையை எதிர்த்து கூட்டம் நடத்த முயற்சித்தும் முடியவில்லை. சென்னையில் சுதந்திரமாக நடத்தமுடிந்தது. அதற்கு காரணம் இங்குள்ள முதல் அமைச்சர் தான்" என்று பாராட்டிச் சொன்னார். தமிழ்நாட்டில் மட்டும் குத்துச் சண்டை நடத்தும் அளவுக்கு நிலைமை சீராக இருக்க "தலைவர்தான்" காரணம் என்று திமுகக்காரர் பேசுவது போல ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசால் 1976 ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

  ஷேர் செய்யப்படும் வசனம்

  ஷேர் செய்யப்படும் வசனம்

  ஆட்சி கலைக்கப்படும் முன்பாக எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பசுபதி கதாபாத்திரம் பேசுவது போல ஒரு காட்சி இருக்கும்.. அதில் அவர் பேசிய வசனம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களால் கூட சமூக வலைத்தளங்களில் இப்போது அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஏனென்றால் அது அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக வைக்கப்பட்ட வசனம் போல இல்லை என்று கூறுகிறார்கள் காங்கிரஸ் கட்சி அனுதாபிகள். அது என்ன வசனம் என்கிறீர்களா இதோ..

  ஒற்றையாளாய் எதிர்ப்பது தமிழக தலைவர்

  ஒற்றையாளாய் எதிர்ப்பது தமிழக தலைவர்

  "பிரதமரின் சர்வாதிகாரம் எமெர்ஜென்சி என்ற பெயரில் இந்தியாவை சிதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் நம் தலைவர் அவர்களின் ஆட்சியால் நாம் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டத்திற்கு எதிராக ஒற்றையாளாய் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார் நமது தலைவர் அவர்கள். நடிகர்களின் மாயையில் சிக்காமல் தமிழகம் அவர் பின்னால் திரண்டால் அங்கே செங்கோட்டை வெடித்துச் சிதறும். இத்தகைய ஆட்சி செய்யும் பிரதமரே ராஜினாமா செய்.." இவ்வாறு ரங்கன் வாத்தியார் (பசுபதி) பொதுக் கூட்டத்தில் பேசுவது போல வசனம் உள்ளது.

  ரஞ்சித் அரசியல்

  ரஞ்சித் அரசியல்

  இந்த வசனம் யாரை நோக்கி பேசப்படுகிறது எந்த காலகட்டத்திற்கு பொருந்தும் என்பது இயக்குனர் பா ரஞ்சித் முன்னெடுக்கும் அரசியலை உற்று பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக புரிந்து இருக்கும். எனவே தான் இப்போது இந்த வசனம் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

  அரசியல் வசனங்கள்

  அரசியல் வசனங்கள்

  சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பசுபதி கதாபாத்திரம் மேலும் சில இடங்களிலும் திமுகவை உயர்த்தி பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது. "நான் கழகத்துக்காரன் அச்சப்பட மாட்டேன்.." என்பது அதில் ஒரு முக்கியமான வசனம். அதேநேரம், எம்ஜிஆர், இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்ததை போல ஒரு சுவர் விளம்பரம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும், மிசா சட்டத்தின் மூலமாக கருணாநிதி மகன் ஸ்டாலினை கூட கைது செய்துவிட்டார்கள் என்பது போன்ற வசனம் இருக்கிறது. மொத்தத்தில் படம் முழுக்கவே விளையாட்டையும் அரசியலையும் சரிசமமாக தூவியிருக்கிறார் பா.ரஞ்சித். இதன் காரணமாகத்தான், படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆனபிறகும் கூட அது தொடர்பான வாத விவாதங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

  English summary
  Pa.Ranjith using political punch dialogues In Sarpatta Parambarai movie, especially through Pasupathi character and the movie highlights DMK on a positive note.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X