சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மைன்ட் வாய்ஸ் மன்னாரு... அத்தனையும் கிராபிக்ஸா கோப்பால்.. முதல் அடி நம்ம அடியாதான் இருக்கு!

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    DMDK : கட்சி மாறும் நிர்வாகிகள்.. கலைய போகிறது தேமுதிக?

    சென்னை: கேட்டீங்களாண்ணே.. செந்தில் பாலாஜி போன்றவர்களை நேர்ல பார்த்ததே இல்லையாம்.. தினகரன் சொல்றாறு.. அப்ப இத்தனை நாளா நாம பார்த்தது எல்லாம் கிராபிக்ஸா..!

    ஏண்ணே இந்த தேமுதிக அடுத்து என்ன செய்யப் போகுது.. திமுகவுடன் கூட்டணி சேரலாம்னு ஒரு குரூப் பேச ஆரம்பிச்சிருக்காம்.. எப்படிண்ணே அது சாத்தியமாகும்.. ஏன் ஆகாது.. இது அரசியல்.. என்ன வேணும்னாலும் செய்வாங்க.

    அதுவும் சரிதான்.. ஆமா இந்த வீரப்ப மொய்லி ஏன் திடீர்னு சசி தரூர், ஜெய்ராம் ரமேஷ் மேல பாஞ்சிருக்காரு.. இரு போய் கேட்டுட்டு வந்து சொல்றேன்...!

    தலைவர்களுக்கு செய்வினையா.. அலறும் பெண் எம்பி.. எரிச்சலில் பாஜக தலைவர்கள்தலைவர்களுக்கு செய்வினையா.. அலறும் பெண் எம்பி.. எரிச்சலில் பாஜக தலைவர்கள்

    பிரேமலதா கவலை

    பிரேமலதா கவலை

    கச்சத்தீவு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தி.மு.க. கையூட்டு பெற்று, கையெழுத்து போட்டது. ஆனால் இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது. பிணத்திடமிருந்து மோதிரத்தை திருடும் கட்சிதானே தி.மு.க: பிரேமலதா (ஓ.கே. நீங்க இப்படி சொல்றீங்க, ஆனால் உங்க கட்சியில் மிச்சம் சொச்சமிருக்கிற நிர்வாகிங்களோ ‘இனி வரும் தேர்தல்லேயாவது தி.மு.க. கூட்டணியில சேர்ந்து கரை சேர பார்ப்போம். இல்லேன்னா நாங்களும் கட்சியை விட்டு கழண்டுக்குவோம்.'ன்னு சொல்றாங்களாமே! என்ன செய்ய?)

    முதல் அடி அக்காதான்

    முதல் அடி அக்காதான்

    முதல்வர் இ.பி.எஸ். வெளிநாடு செல்வதால், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வெளிநாடு முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது. ‘முதல்வரின் பயணத்தால் எந்த பயனும் இல்லை.'ன்னு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வது வெற்று அரசியல் அவதூறு: தமிழிசை. (அக்கா, வரவர நீங்க பா.ஜ.க. தலைவர் அப்படிங்கிறதையே மறந்துட்டு பேசுறா மாதிரி இருக்குது. அ.தி.மு.க.வை பற்றி ஸ்டாலின் விமர்சனம் பண்ணினால், மொத அடி உங்க அடியாதான் இருக்குது. என்னா விவரம்?)

    மொய்லி திடீர் பாய்ச்சல்

    மொய்லி திடீர் பாய்ச்சல்

    ஐ.மு.கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில், பல நேரங்களில் அரசின் கொள்கை நிர்வாகம் செயல் இழந்ததற்கு ஜெய்ராம் ரமேஷ்தான் காரணம். சசிதரூர் ஒருபோதும் முதிர்ச்சியான தலைவராக நடந்து கொண்டதில்லை: வீரப்ப மொய்லி (என்னா குரு, தாறுமாறா ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குறீங்க? உள்ளுக்குள்ளே ஒக்காந்து இம்பூட்டு குடைச்சல் கொடுத்தவங்களை ஏன் மத்தியமைச்சரவையில் வெச்சுட்டு இருந்தீங்களாம்?)

    எல்லாமே கிராபிக்ஸா கோப்பால்!

    எல்லாமே கிராபிக்ஸா கோப்பால்!

    எங்களிடமிருந்து விலகிச் சென்றவர்களை நான் கட்சியில் பார்த்ததே இல்லை. உண்மையான தொண்டர்கள் இப்போது, எப்போதும் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர்: டி.டி.வி.தினகரன். (அப்போ செந்தில்பாலாஜியையும், கலைராஜனையும், தங்கதமிழ் செல்வனையும், சிவசாமியையும், இசக்கி சுப்பையாவையும் நீங்க நேர்ல பார்த்ததே இல்லை. பழைய போட்டோ அத்தனையும் கிராபிக்ஸா கோப்பால், வெறும் கிராபிக்ஸா?)

    - ஜி.தாமிரா

    English summary
    Mind Voice Mannaru comments on Dinakaran who has said that he never saw any deserted leaders in party activities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X