சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சிகள் நிச்சயம் நோட்டாவுக்கு பயந்தாகனும்.. இத மட்டும் செய்யுங்க போதும்.. முன்னாள் தேர்தல் ஆணையர்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் காலங்களில் அரசியல்கட்சிகள் நோட்டாவுக்கு பயப்படும் நிலை உருவாகும் என்று என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-2005ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெற்றது,

Politicians will fear about NOTA says Chief Election Commissioner T. S. Krishnamurthy

தமிழ்நாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், தேர்தல் குறித்த சட்டங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளதாகவும், அதை தற்போதுள்ள தேர்தல் அலுவலர்கள் முறையாகப் பின்பற்றினாலே போதும் என்றார். முதலில் தேர்தல் நடத்திய அதிகாரிக்கே அதிக சிரமம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு 2வது மகிழ்ச்சியான செய்தி.. அந்த பைலில் முதல்வர் போடப்போகும் கையெழுத்து... செம்ம!அரசு ஊழியர்களுக்கு 2வது மகிழ்ச்சியான செய்தி.. அந்த பைலில் முதல்வர் போடப்போகும் கையெழுத்து... செம்ம!

தொடர்ந்து பேசிய அவர், "அப்போதெல்லாம் தேர்தல்களில் வன்முறை இருந்ததில்லை. தேர்தல்கள் எல்லாம் திருவிழாக்கள் போலவே இருக்கும். ஆனால் இப்போதுதான் தேர்தல்களில் வன்முறை, வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது. இதை நாம் சரி செய்ய வேண்டும்" என்றார்.

மேலும், "அனைத்து கட்சிகளும் நேர்மையானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இருப்பினும் அரசியல் கட்சிகள் அதைச் செய்வதில்லை. இதற்காகவே நோட்டாவை அறிமுகப்படுத்தினோம். சமீப காலங்களாகவே நோட்டாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அதிகரித்துள்ளது, இப்போது அரசியல் கட்சிகளுக்கு நோட்டா மீதான அச்சம் அதிகரித்துள்ளது.

ஒரு தேர்தலில் 33% மேல் நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்தால், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான விதிகளை உருவாக்க வேண்டும். பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற விதிகள் உள்ளது. " என்றார்.

பல தொகுதிகளிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிகழ்வுகள்கூட பல தொகுதிகளில் நடந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் 20 பேர் போட்டியிடும்பட்சத்தில் பெரும்பான்மை இல்லாதவர்கள் எளிதில் வெற்றி பெற முடியும் என்றும் இதைத் தடுக்க குறைந்தபட்சம் 51% or 31% வாக்குகள் வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரலாம் என்றும் அவர் கூறினார்.

English summary
Politicians will fear about NOTA says Chief Election Commissioner T. S. Krishnamurthy, He also adds that absolute majority should be made as mandatory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X