சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரண்டில் ஒன்றுதான் நடக்கும்.. கடைசியில் கைவிடும் பாஜகவும்.. பெரும் குழப்பத்தில் எடப்பாடி பழனிச்சாமி

இந்திய அரசியலில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குழப்பத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit Polls 2019: இடைத் தேர்தல்களில் என்ன முடிவு வந்தாலும், அதிமுகவுக்கு கவலை இல்லை- வீடியோ

    சென்னை: இந்திய அளவில் அரசியலில் ஏற்படும் தொடர் மாற்றங்களால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குழப்பத்தில் இருக்கிறார் என்கிறார்கள்.

    லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் இந்நேரம் இந்தியாவின் புதிய பிரதமர் யார் என்று எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

    இதனால் நாடு முழுக்க கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் நடந்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம் நான்சென்ஸ்.. நியூசென்ஸ்.. சென்னை அமைப்பு தாக்கல் செய்த விவிபேட் பொதுநல வழக்கை விளாசிய உச்சநீதிமன்றம்

    கவனம் என்ன

    கவனம் என்ன

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் குறைந்தது அதிமுக 5 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும். அப்படி வெற்றிபெற்றால் மட்டுமே, ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆனால் அதிமுகவின் தலைவலி அது கிடையாது.

    எப்படி நீடிக்கிறது

    எப்படி நீடிக்கிறது

    அதிமுகவின் ஆட்சி தமிழகத்தில் நீடிக்க முக்கிய காரணங்களில் ஒன்று பாஜக. மத்தியில் ஆளும் பாஜக அரசு தேவையான அரசியல் உதவிகளை அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வழங்கி வந்தது. அதற்கு கைமாறாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. அதிமுக - பாஜகவின் நட்பும் நெருக்கமானது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் தேர்தல் முடிவுகள் இவர்களின் நட்பில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை பெற வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல் பாஜக கூட்டணியும் தேசிய அளவில் மெஜாரிட்டி பெறாது என்கிறீர்கள். இதனால் பாஜகவிற்கு மாநில கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவை. ஆனால் அதிமுக தோல்வி அடைய வாய்ப்புள்ளதால், அதிமுகவுடன் பாஜக கூட்டணியை தொடராது.

    திமுகவுடன் கூட்டணி

    திமுகவுடன் கூட்டணி

    தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியான திமுகவுடன், பாஜக கூட்டணி வைக்க திட்டமிட்டு உள்ளது. திமுக 18 இடங்கள் வரை தனியாக லோக்சபா தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. திமுக ஆதரவு அளித்தால், பாஜக கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மை பெற வாய்ப்பு உள்ளது. இதனால் திமுகவிற்கு இப்போதே பாஜக வலைவீசி வருகிறது.

    ஏன் பிரச்சனை

    ஏன் பிரச்சனை

    இதுதான் அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. திமுக பாஜக சேரும் பட்சத்தில், அதிமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை ஸ்டாலின் வைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக பாஜக களமிறங்கி செயல்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால்தான் எடப்பாடி பழனிச்சாமி பதற்றத்தில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

    இரண்டு பக்கம் கத்தி

    இரண்டு பக்கம் கத்தி

    தற்போது தமிழக முதல்வருக்கு இரண்டு பக்கம் கத்தி இருக்கிறது. ஒரு பக்கம் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 5 இடங்களை வெல்ல வேண்டும். இன்னொரு பக்கம் தேசிய அளவில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற வேண்டும். ஆனால் இரண்டில் ஒன்றுதான் நடக்க வாய்ப்புள்ளது, இதனால் ஆட்சிக்கு என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்று எடப்பாடிக்கு தகவல் சென்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Politics waves are not good side: TN CM Edappadi Palanisamy in shock after seeing exit poll results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X