• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆஹா.. வடிவேலு ச்சும்மா ஜாலிக்குத்தாய்யா சொன்னாரு.. இப்படி சீரியஸா விளையாடிட்டீங்களேய்யா!

|

சென்னை: அடுத்த தேர்தலில் நான்தான் முதல்வர் சரியா சரியா என்று கோவில் வாசலில் வைத்து ஜாலியாக பேசி விட்டு போய் விட்டார் நம்ம வைகைப் புயல் வடிவேலு. அதை வைத்து ஜாலியாக நாமும் கேள்வி கேட்கப் போக.. அதை சீரியஸாகவே எடுத்துக் கொண்டு விட்டனர் நம்ம வாசகர்கள்.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. இதுதாங்க இப்போதைக்கு தமிழக அரசியல்வாதிகளிடையே நடந்து வரும் அடிதடி சண்டை. நான்தான் முதல்வர் என்று போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக பலரும் கனவில் மிதந்து கொண்டுள்ளனர்.

அதிமுகவிலேயே கூட 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இந்தக் கனவில் இருப்பதாக சமீபத்தில் ஒருபரபரப்பு தகவல் வெளியானது. இந்த நிலையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேறு, நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. வேறு ஒருவருக்கே முதல்வர் என்று சொல்லி விட்டுப் போக அடுத்த பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது.

முருகனைப் பார்க்கப் போனது குத்தமா

முருகனைப் பார்க்கப் போனது குத்தமா

இந்த நிலையில்தான் முருகா எல்லோரையும் காப்பாத்துப்பா என்று மனசார வேண்டிக் கொள்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவில் பக்கமாக வந்திருந்தார். உள்ளே போய்ட்டு வெளியே வந்த மனுஷனிடம் சாமி கும்பிட்டீங்களா.. என்ன வேண்டிக்கிட்டீங்க என்று ஒருத்தர் (வேற யாரு நிருபர்தான்) கேள்வி கேட்க.. என்னத்த வேண்டிகுக்குவாங்க.. இதெல்லாம் ஒரு கேள்வியா என்று வடிவேலு நிருபரை பார்த்து எதிர் பன்ச் வைக்க ஜெர்க் ஆன செய்தியாளர்கள் கேள்வியை மாத்திப் போட்டனர்.

ஓட்டுப் போடுவீங்களா

ஓட்டுப் போடுவீங்களா

ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று கூறியிருக்கிறாரே என்று கேட்க, அடுத்த தேர்தலில் நான்தான் முதல்வர்.. நீங்க ஓட்டுப் போடுவீங்கள்ள என்று பதில் கேள்வி கேட்டு அப்படியே எஸ் ஆனார் வடிவேலு. வடிவேலு ஜாலியாக இப்படிச் சொல்லப் போக நேற்று முழுவதும் அண்ணனைத்தான் டிரெண்டிங்காக்கி டிவிட்டரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

எதார்த்தமாக கேட்டோம்

எதார்த்தமாக கேட்டோம்

சரி வடிவேலு தன் வாயாலேயே தான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லி விட்டாரே என்று நாமும் அதுகுறித்து வாசகர்களிடம் ஒரு கேள்வி கேட்டோம். முதல்வர் பதவிக்கு யார் பொருத்தம் சொல்லுங்க என்று. வடிவேலு ஒரு ஆப்ஷன், முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்ன நடிகர் ரஜினிகாந்த்.. புதிய அரசியல் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இன்னொருவர். மூன்று பேரில் யார் பொருத்தம் என்று கேட்கப் போக, வாசகர்கள் வந்து குவிந்து விட்டனர்.

வருங்கால முதல்வராம்ய்யா!

வருங்கால முதல்வராம்ய்யா!

இந்த முடிவைப் பார்த்தே வடிவேலுவே பீதியாகி விடுவார்.. ஆமாங்க.. அவரைத்தான் பொருத்தமான முதல்வராக வாசகர்கள் கை காட்டியுள்ளனர். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி ஓட்டுப் போட்டவர்களில் 27.8 பெர்சன்ட் பேர் வடிவேலுதான் முதல்வர் பதவிக்கு செம பொருத்தம்னு சொல்லிருக்காங்க. கங்கிராஜுலேஷன்ஸ் "வருங்கால முதல்வர்" ஐயா!

கமலுக்கு 2

கமலுக்கு 2

அடுத்து 2வது இடத்தில் இருப்பவர் நம்ம கலைஞானி கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் வலம் வரும் கமல்ஹாசன், அப்படி வாங்க வழிக்கு என்று கூறி ரஜினியைப் பார்த்து சமீபத்தில் சந்தோஷப்பட்டார்.. ஆனால் தற்போது ரஜினி தேர்ந்தெடுத்துள்ள வழி குறித்து அவர் இதுவரை வாய் திறக்காமலேயே உள்ளார். கமல்ஹாசனுக்கு கிடைத்த வாக்குகள் 17.88% ஆகும்.

3வது இடத்தில் முரட்டுக்காளை

3வது இடத்தில் முரட்டுக்காளை

3வது இடத்தில் ரஜினிகாந்த் வருகிறார். அவருக்கு முதலிடம் கிடைக்காமல் போனதை விட, 2வது இடம் கிடைக்காமல் போனதை விட, 3வது இடம் கிடைத்துள்ளதே என்பதை விட மிகக் குறைந்த வாக்குகளே கிடைத்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. 13.36 சதவீத ஆதரவு ரஜினிகாந்த்துக்குக் கிடைத்துள்ளது. ஆக.. முதல்வர் ஆவதில்லை என்று ரஜினிகாந்த் எடுத்த முடிவு சரிதான் போல என்று எண்ணத் தோன்றுகிறது.

மூனு பேரும் லாயக்கில்லை

மூனு பேரும் லாயக்கில்லை

சரி 3 பேருமே நல்ல வேட்பாளர்கள்தான், ஏங்க பிரிச்சுப் பாக்கறீங்க என்று கேட்ட கேள்விக்கு, ஆமாங்க ஆமா என்று வெறும் 1.41 சதவீத வாசகர்கள்தான் கை காட்டியிருக்காங்க. ஆனால் இதை விட முக்கியமான விஷயம்.. இந்த மூன்று பேருமே லாயக்கில்லை என்று நிராகரித்த வாசகர்கள்தான் அதிகமோ அதிகம். அதாவது 39.56 சதவீத வாசகர்கள், இந்த மூன்று பேருமே அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டார்கள் என்று ஊமக்குத்தாக குத்தி விட்டார்கள். (நல்ல வெவரமாத்தான் இருக்காங்க நம்ம வாசகர்கள்)

அடிக்க வந்துராதீங்க!

அடிக்க வந்துராதீங்க!

அடுத்து என்ன கேள்வி கேட்கலாம்.. யோசிப்போம்!... பிறகு மக்களே, இந்த கருத்துக் கணிப்புகள் எல்லாம் நாட்டு நடப்புக்கேற்ப, அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கேற்ப வாசகர்களின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ளத்தான். இதை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு அடிக்கெல்லாம் வந்துராதீங்க.. பாடி தாங்காது.. சரியா!

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
A casual poll conducted by Oneindia Tamil says that Comedian Vadivelu is best fit for Chief Mnister post than Actors Rajinikanth and Kamalhaasan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X