சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை, கோவை.. பொள்ளாச்சி கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்.. கொந்தளிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்-வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நடுவே போராட்டம் விரிவடைந்துள்ளது.

    பொள்ளாச்சி, பாலியல் பலாத்கார விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. மேலும் குற்றவாளிகளுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மாநிலம் முழுக்க கோரிக்கைகள் வலுத்துள்ளன.

    Pollachi gang rape: Collage students stage protest

    இதனிடையே, போராட்டக் களத்திற்கு மாணவர்களும் வந்துள்ளனர். இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பெரும் போராட்டம் நடத்தி கைதாகினர்.

    பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்க கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு

    பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    Pollachi gang rape: Collage students stage protest

    சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வலியுறுத்தியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    மாணவர்கள் மட்டத்தில் போராட்டம் விரிவடைந்துவிட்டதால், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.

    English summary
    Collage students stage protest across Tamilnadu over Pollachi gang rape issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X