சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்.. பொங்கிய பொதுமக்கள்

திருநாவுக்கரசு தாய் லதாவிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா-வீடியோ

    சென்னை: "400 பொண்ணுங்கம்மா.. உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில எல்லாம் நாண்டுகிட்டு சாவணும்!" என்று திருநாவுக்கரசின் தாய் லதாவிடம் பொதுமக்கள் சரமாரியான கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

    மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் லதா பொள்ளாச்சி ஜே.எம்.எண்.1 கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

    Pollachi Rape case issue

    அப்போது நீதிபதி உத்தரவுக்காக கோர்ட் வளாகத்தில் காத்திருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் லதாவை பார்த்ததும் கொதித்து போய் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுமக்களின் ஆதங்கம், ஆத்திரத்துடன் எழுப்பிய கேள்விகளும், பிள்ளையை பெற்ற லதாவின் சமாளிப்பு பதில்களும்தான் இவை:

    பொதுமக்கள்: ஏம்மா.. உங்க மகன் என்னென்ன பண்ணியிருக்கான்னு தெரியுமா? அவன் பெயிலுக்கு போயி வந்திருக்கீங்களே?

    லதா: அவன் ஒரு தப்பும் செய்யல. நீங்க எல்லாரும்தான் சேர்ந்து அவன் மேல இப்படி பழி போடறீங்க? நான் வேணா சூசைட் பண்ணிக்கட்டுமா? உண்மை என்னன்னு உங்களுக்கு தெரியுமா? அவன் செய்றானோ செய்யலையோ.. விஷத்தை எனக்கு தாங்க, நான் குடிக்கறேன்.

     யார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா யார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க.. கோர்ட்டில் கத்திய திருநாவுக்கரசின் தாய் லதா

    பொதுமக்கள்: பல பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு போட்டிருக்கிறது உங்களுக்கு தெரியல... உங்க அழுகை அதுக்கு பதிலா இருக்குமா? அந்த வீடியோ முன்னாடியே வாங்கனேன்னு உங்க பையனே சொல்லி இருக்கான். 100 பொண்ணுங்க இருக்கிற வீடியோவை இன்னொரு பையன்கிட்ட இருந்து வாங்கினதா உங்க பையனே ஓபனா சொல்லிட்டான். உங்க பையன் அவ்வளவு நல்லவனா இருந்திருந்தா, நீங்க நேரா போய் கமிஷனர் ஆபீசில தர வேண்டியதுதானே, இல்லைன்னா பிரஸ்ல போய் தர வேண்டியதுதானே?

    லதா: எல்லாரும் சேர்ந்து ஒரு வாரமா அடைச்சி வெச்சிருந்தீங்க இல்லை.. நான் போய் ஆஸ்பத்திரியில வெச்சு காப்பாத்தி கொண்டு வந்தேன்.

    பொதுமக்கள்: அக்கா.. முதல்ல நிலைமையை புரிஞ்சுக்குங்க.. அப்டின்னா.. உங்களுக்கு உங்க பையன்தான் முக்கியம் இல்லை? பொண்ணுங்களோட வாழ்க்கை கெட்டது எல்லாம் உங்களுக்கு வேணாம் இல்லை?

    பொதுமக்கள்: 10 நாளா ஆஸ்பத்திரியில வெச்சிருந்தேன்னு சொல்றீங்க? எந்த ஆஸ்பத்திரியில?

    லதா: கோவை மெடிக்கல். நான் சர்ட்டிபிகேட் வச்சிருக்கேன். போய் அங்கேயே கேளுங்க.

    பொதுமக்கள்: ஏம்மா.. தமிழ்நாடா இருக்கப் போயிதான் இந்த பேச்சு நீங்க பேசறீங்க. இதுவே வேற வெளி மாநிலத்துல இது நடந்திருந்தா, இந்நேரம் உங்க பையனுக்கு நடந்திருக்கிறதே வேறயா இருந்திருக்கும்?

    லதா: செய்யுங்க.. என்ன வேணும்னாலும் செய்யுங்க. அந்த ஆண்டவனுக்குதான் தெரியும். நான் படிக்கல.

    பொதுமக்கள்: சும்மா அழாதீங்கம்மா.. நியாயத்தை நினைச்சு பாருங்க

    பொதுமக்கள்: ஏம்மா.. ஒரு பொண்ணா, ரெண்டு பொண்ணாம்மா, 400 பொண்ணுங்க... சும்மா கிடையாது

    லதா: அது என் பையன் செய்யல.. வேற யாரோ செஞ்சாங்க?

    பொதுமக்கள்: யாரும்மா செஞ்சது.. பெத்த பையன் எங்க போறான், வரான்னு தெரியாம அப்படி என்ன வளர்ப்பு இது? 400 பொண்ணுங்க மேல கை வைக்கிற வரைக்கும் உங்களுக்கு ஒன்னுமே தெரியாது இல்ல?

    பொதுமக்கள்: பணத்திமிர்... பணத்திமிர்.. உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்குல்லம்மா.. ஏம்மா, உன் குடும்பத்துக்கும் எங்களுக்கும் என்னம்மா சம்பந்தம்? 400 பொண்ணுங்கம்மா... வெட்கமா இல்லையா? உன் பையன் செஞ்சதுக்கு பொள்ளாச்சியில உள்ள எல்லாம் நாண்டுகிட்டுதான் சாவணும்!"

    பரிதவிப்பு, துக்கம், வேதனை, இயலாமை, ஆற்றாமை, கோபம், ஆவேசம் எல்லாம் கலந்து அந்த இடமே பெரும் இறுக்கமாக காணப்பட்டது.

    English summary
    The public questioned Thirunavukarasu's mother Latha in Pollachi Court Campus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X