சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொள்ளாச்சி பயங்கரத்திற்கு எதிராக முதல்வர் வீடு வரை நீண்ட போராட்டம்.. போலீஸ் குவிப்பு.. அதிரடி கைது

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி பயங்கரத்திற்கு எதிராக முதல்வர் வீடு வரை போராட்டம்- வீடியோ

    சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் ஆதரவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    Pollachi rape: Protest in front of CM Edappadi Palanisamy house

    இதுவரை அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை என்றும், உரிய வகையில் வழக்கு விசாரணை நடைபெறவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு.. சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்றம்.. அரசாணை வெளியீடு பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு.. சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்றம்.. அரசாணை வெளியீடு

    இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பினர் இன்று மதியம் சுமார் 12 மணி அளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிட கிளம்பினர்.

    நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஊர்வலமாக முதல்வர் இல்லத்தை நோக்கி கிளம்பினர். இந்த தகவல் அறிந்ததும் மந்தைவெளி அருகே போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை, போலீசார் கைது செய்து அவர்களை முற்றுகையிடப்பட செய்யாமல் தடுத்து அழைத்துச் சென்றனர்.

    தமிழகம் முழுக்க கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த விவகாரத்திற்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Indian Communist Party youth wing stage protest in front of Tamilnadu CM Edappadi Palanisamy house over Pollachi gang rape issue and they were arrested by the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X