சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவல்துறைக்கு கெளரவம் சேர்த்த கம்பீர மீசை.. முறுக்கி விட்டு தட்டிக் கொடுத்த ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தனது பணி நீட்டிப்பு குறித்து பொன்.மாணிக்கவேல் பேட்டி- வீடியோ

    சென்னை: காவல் துறைக்கு கௌரவமும் சிறப்பையும் சேர்த்த கம்பீர மீசைக்கு சொந்தகாரரான பொன் மாணிக்கவேல் ஓய்வு பெறும் நாளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நேர்மை, நியாயம், நீதி, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் பேரும், புகழும் நம்மை வந்து சேரும் என்பார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அரசு அதிகாாிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கனகச்சிதமாக பொருந்தும்.

    மேற்கொண்ட விஷயத்தை கடைப்பிடிக்காதவர்களின் பெயர் எந்த அளவுக்கு ரிப்பேர் ஆகியுள்ளது என்பதை நாம் அறிவோம். அது போல் நான்கையும் கடைப்பிடித்தால் தமக்கும் தமது துறைக்கும் கம்பீரத்தையும் கௌரவத்தையும் சேர்த்துவிடும் என்பதையும் யாரும் அறியாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

    மேலதிகாரிக்கோ, அரசுக்கோ பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய வேண்டியதில்லை: ஹைகோர்ட் உத்தரவு மேலதிகாரிக்கோ, அரசுக்கோ பொன்.மாணிக்கவேல் ரிப்போர்ட் செய்ய வேண்டியதில்லை: ஹைகோர்ட் உத்தரவு

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    இதற்கு மிக பொருத்தமான உதாரணம் பொன் மாணிக்கவேல். அவர் தனது காவல் பணியை உயிர் மூச்சாக கருதினார். தான் இருக்கும் துறைக்கும் தாம் மேற்கொண்டிருந்த சிலை கடத்தல் சவால்களையும் எப்படியாயினும் எதிர்கொள்ள வேண்டும் என நினைத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பொறுப்பேற்ற இந்த இரு ஆண்டுகளாக சிங்கப்பூர் வரை ஓடினார்.

    புளி கரைப்பு

    புளி கரைப்பு

    இன்று ஓய்வு பெறும் நாள் வரை அவரால் எந்த அளவுக்கு வேகம் காண்பிக்க முடியுமோ அந்த அளவுக்கு வேகம் காட்டி எதிர்பார்த்ததை விட அதிகமாகவே அந்த துறைக்கு செய்து விட்டார். பொன் மாணிக்கவேல் ஒவ்வொரு சிலை கடத்தல்ககாரர்களாக கண்டுபிடிக்க கண்டுபிடிக்க பெரும் தலைகளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார் என்றவுடன் நிம்மதி அடைந்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில் கூட முழு நிறைவுடன் விடை பெறுகிறேன் என்றார். எனினும் இன்னு்ம சிலை கடத்தல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போயிற்றே ஆதங்கம் அவர் மனதுக்குள் இருந்தது. அது கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு மூலம் வெளிப்பட்டது.

    தட்டிக் கொடுத்தல்

    தட்டிக் கொடுத்தல்

    இந்த தீர்ப்பை அவர் சும்மா பெறவில்லை. இதன் பின்னால் அவரது நேர்மை, தொழில் பக்தி, உழைப்பு, துணிச்சல் ஆகியன இருந்தது. ஏற்கெனவே பல அதிரடிகளால் காவல்துறைக்கு கௌரவம் சேர்த்த பொன் மாணிக்கவேலின் மீசையை ஹைகோர்ட் மேலும் முறுக்கிவிட்டு தட்டிக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

    English summary
    Pon Manickavel gives more pride to his police department after getting Chennai HC Verdict to appoint him as a special officer for statue smuggling case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X