சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகனின் ஐம்பொன் சிலை... தடுத்து நிறுத்தி பொன் மாணிக்கவேல் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சிலை, தடுத்து நிறுத்தி பொன் மாணிக்கவேல் அதிரடி

    சென்னை : ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட முருகன் ஐம்பொன் சிலையை சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடியாக பிடித்தனர்.

    சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு தனியார் லேத் பட்டறையில் ஐம்பொன் சிலை ஒரு கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விசாரணை

    விசாரணை

    அப்போது சிவகுமார், தேவனடிகள், முகேஷ் ஆகிய 3 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து ஐம்பொன் சிலைகள் கைப்பற்றப்பட்டது. முதலில் அந்த சிலையை மண்ணில் இருந்து தோண்டி எடுத்ததாக சிவகுமார் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம் விசாரிக்க வேண்டிய வகையில் விசாரணை நடத்தினர்.

    சிலை கடத்தல்

    சிலை கடத்தல்

    அப்போது அரக்கோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். இவர் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் நீண்ட தாடியுடன் சாமியார் போல கோயில்களில் வலம் வந்த தேசனடிகள் மூலம் இந்த சிலை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    விலை பேசியது

    விலை பேசியது

    சிலையை கன்னியாகுமரியைச் சேர்ந்த முகேஷ் செனஅனை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து ரூ. 1 கோடிக்கு விலை பேசியது தெரியவந்தது.

    பேரம்

    பேரம்

    இதையடுத்து சிவக்குமார் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற 2 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற பொன் மாணிக்கவேல் அண்மையில் இந்து அறநிலையத்துறை அதிகாரி திருமகளை கைது செய்தார். இந்நிலையில் அடுத்த அதிரடியாக கோடிக்கு பேரம் பேசப்பட்ட சிலையை தடுத்து நிறுத்தினார். இந்த சிலை கடத்தல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    English summary
    Pon Manickavel stopped the sale of idols near Ekkatuthangal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X