சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா?.. காங். ஆட்சியிலேயே பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அட்வைஸ்

குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: குஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா? இத்தனை வருஷங்களாக குஷ்பு நம்ம தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்.. சினிமாவில் அறிமுகமானது முதல் நாம் பார்த்து வருகிறோம்.. ஆனால் இப்போது திடீரென்று குஷ்புவின் பாதுகாப்பு மீது அனைவருக்கும் அக்கறை வந்துவிட்டது ஆச்சரியமாக உள்ளது! குஷ்பு மேல இத்தனை பேருக்கு பாசமா?

கடந்த வாரம் உசிலம்பட்டியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ராகுல்காந்திதான் பிரதமராக வரவேண்டும் என்று பேசினார். பின்னர், 2 நாளைக்கு முன்னாடி, மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஷ்வான் ஹர்சத்தை ஆதரித்து குஷ்பு பெங்களூர் சென்றார்.

யாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்யாருக்கு வாக்களிக்கக் கூடாதுனு நாங்கள் முடிவு செய்துட்டோம்.. கமலுக்கு அனிதா அண்ணன் பதில்

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அப்போது கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. கூட்டத்தினரை கடந்து குஷ்பு சென்றுகொண்டிருந்த போது, ஒருவர் எடக்கு மடக்காக குஷ்பு மீது கை வைத்ததாகவும், அதற்கு கோபப்பட்ட குஷ்பு, அந்த நபரை கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த வீடியோ பெரும் வைரலாகி விட்டது.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

இந்நிலையில், நேற்று பிரேமலதா விஜயகாந்த் சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''காங்கிரஸில் அக்கட்சியிலுள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. எனவே நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்'' என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

கவனம் தேவை

கவனம் தேவை

இதை பற்றி இன்று கருத்து தெரிவித்துள்ள கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனோ, "காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால் குஷ்பு கொஞ்சம் கவனமாக இருந்து கொள்வது நல்லது" என்று அறிவுறுத்தி உள்ளார்.

அட்வைஸ்

அட்வைஸ்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிகை குஷ்பு சொல்லப்போய், இப்போது அதுவே குஷ்புக்கு எதிராக திருப்பிவிட்டு அட்வைஸ் செய்து வருகிறார்கள் நம் தமிழக தலைவர்கள்!

English summary
Kanniyakumari BJP Candidate Pon Radhakrishnan adviced "Kushboo should be Careful"
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X