சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நேரில் சந்தித்த பொன்னார்.. அழைப்பு விடுத்த எஸ்.வி சேகர்.. ராதாரவியை பாஜக இழுத்தது எப்படி?

திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இருந்த ராதாரவி பாஜகவில் இணைந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜே பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ராதாரவி!| Actor Radha Ravi joins BJP party

    சென்னை: திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இருந்த ராதாரவி பாஜகவில் இணைந்தது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

    நடிகர் ராதாரவி அதிமுக கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் சினிமா விழா ஒன்றில் நடிகை நயன்தாராவிற்கு எதிராக திமுகவில் இருந்த சமயத்தில் ராதாரவி பேசினார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார்கள் வைக்கப்பட்டது.

    இதையடுத்து திமுகவில் அப்போது அதிரடியாக ராதாரவி நீக்கப்பட்டார்.
    இதையடுத்து திமுகவில் இருந்து வெளியேறிய அவர் சில வாரங்களில் அதிமுகவில் இணைந்தார்.

    எப்படி மரியாதை

    எப்படி மரியாதை

    அதிமுகவில் இணைந்த போது ராதா ரவி, எனக்கு திமுகவில் மரியாதை இல்லை. அங்கு பல வருடமாக இருந்தும் என்னை யாரும் மதிக்கவில்லை. ஆனால் அதிமுகவில் எனக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. இங்கு எனக்கு நல்ல மதிப்பு கிடைக்கிறது என்று ராதா ரவி குறிப்பிட்டு இருந்தார்.

    ஆனால் இங்கும் இல்லை

    ஆனால் இங்கும் இல்லை

    ஆனால் ராதா ரவி அதிமுகவில் இணைந்த பின் அவர் பெரிதாக எந்த கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை. கட்சியில் அவர் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை. திமுகவில் அவருக்கு கிடைத்த மரியாதை கூட அதிமுகவில் கிடைக்கவில்லை என்கிறார்கள். இதை சில அதிமுக நிர்வாகிகளிடம் கூறி அவர் புகாரும் தெரிவித்துள்ளார்.

    சந்திப்பு நடத்தினார்

    சந்திப்பு நடத்தினார்

    இந்த நிலையில்தான் கடந்த மாதம் நடந்த திருமண விழா ஒன்றில் ராதா ரவி பாஜக தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். அப்போது அவர் பாஜக முன்னாள் எம்பி பொன். ராதாகிருஷ்னன் உடன் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்தார். அப்போதே அவர் பாஜகவில் இணைவதற்கான அடித்தளம் போடப்பட்டுள்ளது.

    எஸ் வி சேகர்

    எஸ் வி சேகர்

    அதன்பின் இன்னொரு முக்கியமான பாஜக நிர்வாகி வீட்டு திருமணம் ஒன்றில் ராதா ரவி மீண்டும் பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் பாஜகவின் எஸ்வி சேகர் உடன் ஆலோசனை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழக அரசியல் குறித்து பேசி இருக்கிறார்கள். அப்போதுதான் ராதா ரவி பாஜகவில் சேர முடிவு செய்துள்ளார்.

    காத்திருப்பு

    காத்திருப்பு

    ஆனால் அவர் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் சென்னை வருகைக்காக காத்து இருந்தார். அவர் வரும் போது கட்சியில் இணையலாம் என்று இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்று ராதா ரவி பாஜகவில் இணைந்தார்.

    English summary
    Pon. Radhakrishnan and S V Shekher are the reason behind Radha Ravi joining in BJP party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X