சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி- 7 முறை போட்டியிட்டு 5 முறை தோற்ற பொன். ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடுகிறார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். இந்த தொகுதியில் ஏற்கனவே 8 முறை போட்டியிட்டு 6 முறை தோல்வியைத் தழுவியர் பொன். ராதாகிருஷ்ணன்.

தொகுதிகள் மறுசீரமைப்புக்கு முன்னர் நாகர்கோவில் லோக்சபா தொகுதியாக இருந்தது இன்றைய கன்னியாகுமரி தொகுதி. நாகர்கோவில் தொகுதியாக இருந்த போது கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

ஹெச். வசந்தகுமார்

ஹெச். வசந்தகுமார்

தற்போதைய கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2019 லோக்சபா தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தலைவர்களின் தொகுதி

தலைவர்களின் தொகுதி

இந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் களமிறங்குகிறார். மார்ஷல் நேசமணி, தாணுலிங்க நாடார், காமராஜர், குமரி அனந்தன் என பெருந்தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி. 1951 முதல் 1998 வரை காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் வசமே இந்த தொகுதி இருந்தது. 1980 முதல் 1991 வரை காங்கிரஸின் பிரதான எதிர்க் கட்சியாக இந்த தொகுதியில் ஜனதா தள் இருந்து வந்தது.

1996 முதல் பாஜக போட்டி

1996 முதல் பாஜக போட்டி

1996-ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி இந்த தொகுதியில் போட்டியிட தொடங்கியது. 1996 லோக்சபா தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸின் என். டென்னிஸ், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர். இதில் என். டென்னிஸ் வென்றார். 1998-லும் டென்னிஸ், பொன்னார் இடையே போட்டி இருந்தது. அப்போதும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவினார். 1999 தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

சிபிஎம், திமுகவிடம் தோல்வி

சிபிஎம், திமுகவிடம் தோல்வி

2004 லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெல்லார்மின் வெல்ல 3-வது முறையாக தோல்வி அடைந்தார் பொன். ராதாகிருஷ்ணன். 2008-ம் ஆண்டு தொகுதிகள் மறுசீரமைப்பின் கீழ் கன்னியாகுமரி தொகுதியாக உருமாறியது இது. 2009-ல் திமுகவின் ஹெலன் டேவிட்சன் வென்றார். 2014-ல் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன் 2-வது முறையாக வெற்றி பெற்றார்.

8வது முறையாக போட்டியிடும் பொன்னார்

8வது முறையாக போட்டியிடும் பொன்னார்

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த ஹெச். வசந்தகுமார் 6,27,235 வாக்குகளை அள்ளி அமோக வெற்றி பெற்றார். ஆனால் பொன். ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இத்தொகுதியில் 7 முறை போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் 5 முறை தோல்வியைத் தழுவி இருக்கிறார். 2 முறைதான் வென்றுள்ளார். தற்போது 8-வது முறையாக மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார் பொன். ராதாகிருஷ்ணன்

English summary
Former Union Minsiter Pon Radhakrishnan will contest as BJP's candidate in Kanyakumari Lok Sabha bypolls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X