சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: அத்திரவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல காஞ்சிவரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களுக்கு தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகமோ சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் சென்னை வியாசர்பாடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் சாதாரண தேரோட்டத்துக்கு செய்யப்படும் ஏற்பாடுகள் கூட அத்திவரதர் தரிசனத்துக்கு செய்யப்படவில்லை.

அத்திவரதர்

அத்திவரதர்

அமைச்சர் யாரும் கோயிலுக்கு சென்று பார்வையிடவில்லை. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக சில அமைச்சர்களை அங்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அத்திவரதரை தரிசித்து அருள் பெற வேண்டும் என வந்துள்ளார்கள்.

பொன்னையா

பொன்னையா

கடந்த 2 நாட்களாக கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவத்தால் மனவேதனை அடைகிறது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக கோயிலுக்கு கர்ப்பிணிகள், முதியவர்கள் வர வேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

தலைக்குனிவு

தலைக்குனிவு

பக்தர்களை வர வேண்டாம் என சொல்லுக்கு அளவுக்கு அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உடனே அவர் அதை திரும்ப பெற வேண்டும். இது தமிழகத்துக்கு தலைக்குனிவான செயலாகும்.

குடிநீர்

குடிநீர்

முடியாவிட்டால் திருப்பதியிலிருந்து நிர்வாகிகளை இங்கு வரவழைத்து ஏற்பாடுகள் செய்யலாம். பக்தர்களுக்கு குடிநீர், உணவு வசதிகள் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

பிரதமர்

பிரதமர்

இந்தியை எதிர்க்கும் திமுக, தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே இந்தி கற்று கொடுக்கிறார்கள். அவர்கள் அந்த பள்ளியை மூட தயாரா? தமிழை தூக்கி தலையில் வைத்துக் கொண்ட ஆடக் கூடிய ஒரு பிரதமர் இருப்பாரேயானால் அவர் நரேந்திர மோடி மட்டும்தான்.

பொன் ராதாகிருஷ்ணன்

பொன் ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளை மூட தொடங்கினார்கள். அதை இப்போது அமைச்சர் செங்கோட்டையன் சரி செய்து வருகிறார். அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

English summary
Pon Radhakrishnan says that how a collector says elders and pregnant ladies not come to visit Athivaradhar .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X