சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நடிகர் விஜய் அரசியல் பேசக்கூடாது என யாரும் சொல்ல முடியாது... பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Vijay speech in Bigil Audio launch | சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

    சென்னை: நடிகர் விஜய் இந்திய நாட்டின் குடிமகன் என்பதால் அவருக்கு அரசியல் பேச உரிமையுள்ளது என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விளக்கக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். அரசியலில் உண்மையான கருத்துக்களை யார் கூறினாலும் அதனை தாம் வரவேற்பதாகவும், உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

    pon.radhakrishnan talk about actor vijay speech in bigil audio launch

    நடிகர் விஜயை பொறுத்தவரை அவர் இந்நாட்டின் குடிமகன் என்பதால், தாராளமாக அரசியல் பேச அவருக்கு உரிமைகள் உள்ளது, உண்மையாக பேசவில்லை என்றால் அவரது மனசாட்சி உறுத்தும் எனப் பேசினார் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், அது தற்போதும் தொடர்வதாகவும் கூறினார்.

    கவலைப்படாம போங்க.. உறுதியளித்த ராஜீவ் குமார்.. வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்கவலைப்படாம போங்க.. உறுதியளித்த ராஜீவ் குமார்.. வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

    கீழடி அகழாய்வை மத்திய அரசு நிறுத்தப் பார்த்ததாக சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும், கீழடிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார். உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, அங்கிருக்கக் கூடிய அரசுக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனப் பேசினார்.

    இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது, வேட்பாளரை நிறுத்துவது பற்றியெல்லாம் தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறினார்.

    English summary
    pon.radhakrishnan talk about actor vijay speech in bigil audio launch
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X