சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் காலி.. தென் மாவட்ட பயணிகள் அதிர்ச்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pongal festival 2020: train ticket booking start today

    சென்னை: பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இனறு காலை 8மணிக்கு தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதனால் தென் மாவட்ட மக்கள் பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    ஜனவரி 10ம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கான ரயில்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது அனைவரையும் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.அந்த வகையில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகை சுமார் ஒருவார காலத்திற்கு கொண்டாடப்படுகிறது.

    pongal festival : train ticket booking started today

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சுமார் 8 நாட்கள் விடுமுறை வருகிறது. இடையில் ஒரு திங்கள் கிழமை மட்டுமே வேலை நாளாக உள்ளது. இதன்படி சனிக்கிழமை ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை (இரண்டாவது சனிக்கிழமை) விடுமுறை நாளாகும். அதன்பிறகு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ஜனவரி 13ம் தேதி திங்கள் வேலை நாள், அதனை தொடர்ந்து ஜனவரி 14 போகி பண்டிகை(செவ்வாய்), ஜனவரி 15 பொங்கல்( புதன்), ஜனவரி 16ம் தேதி மாட்டு பொங்கல் (வியாழக்கிழமை), ஜனவரி 17ம் தேதி காணும் பொங்கல்(வெள்ளிக்கிழமை), ஜனவரி 18ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 8 நாள்கள் விடுமுறை வருகிறது. இதில் ஜனவரி 13ம் தேதி திங்கள் மட்டுமே வேலை நாளாகும். இதனால் குழந்தைகளோடு ஊருக்கு செல்பவர்கள் ஒருவாரத்திற்கு சொந்த ஊர் சென்று பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள்.

    கோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதிகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி

    இப்படி பொங்கலை கொண்டாட விரும்பும் மக்களின் பயணத்திற்கான முதல் தேர்வு ரயிலில் செல்வது தான் எனவே பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி உள்ளது. ஜனவரி 10ம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. இதேபோல் ஜனவரி 11ம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளை மறு நாள் அதாவது சனிக்கிழமையும் தொடங்குகிறது.ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ம் தேதியும், ஜனவரி 14ம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ம் தேதி திங்கள்கிழமையும் தொடங்குகிறது.

    பொங்கல் முடிந்து ஜனவரி 19ம் தேதி ஊருக்கு திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று காலை 10ம் தேதிக்கான முன்பதிவு தொடங்கியது. ஆனால் சில நிமிடங்களிலேயே தென் மாவட்ட ரயில்களுக்கான டிக்கெட்டுகள் காலியாகி விட்டன. பாண்டியன், வைகை என எந்த ரயிலிலும் இடம் இல்லை. எல்லாம் நிரம்பி விட்டன. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் காத்துக் கிடந்த தென் மாவட்ட பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    English summary
    pongal festival 2020: train ticket booking start today, to day can book to travel on january 10th 2020
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X