சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவினரை விட்டு பொங்கல் பரிசு டோக்கன் கொடுப்பதா..? மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை அதிமுகவினர் கொடுக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களை கொண்டு பொங்கல் பரிசு டோக்கனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

2020 ரீவைண்ட்... ஒரே வரியில் உங்கள் விரல் நுனியில் தகவல்கள்... படிக்கவும்... பாதுகாக்கவும்.. இதோ..!2020 ரீவைண்ட்... ஒரே வரியில் உங்கள் விரல் நுனியில் தகவல்கள்... படிக்கவும்... பாதுகாக்கவும்.. இதோ..!

பரிசு டோக்கன்

பரிசு டோக்கன்

இப்போது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அ.தி.மு.க.வினரை வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கான "டோக்கன் விநியோகம்" செய்ய வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. பொங்கல் பரிசு அரசு கஜானாவில் இருந்து வருகிறது. அது மக்களின் வரிப்பணம். அது மக்களுக்கே திரும்பிப் போவதைத் திராவிட முன்னேற்றக் கழகம் மனமார வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தலுக்காக, அரசின் பொங்கல் பரிசை அ.தி.மு.க.வினரை வைத்து எப்படி வழங்கச் சொல்கிறார் முதலமைச்சர்?

 ஸ்டாலின் புகார்

ஸ்டாலின் புகார்

அரசு கஜானாவிலிருந்து போகும் பரிசுத் திட்ட நிதியை அ.தி.மு.க.வினர் ஏன் கையாள வேண்டும்? அனைத்துமே தவறுக்கு மேல் தவறாக இருப்பதோடு- அனைத்து அரசி குடும்பை அட்டைதாரர்களுக்கும் இந்தப் பொங்கல் பரிசு முறையாகப் போய்ச் சேருவதில் குளறுபடிகளை ஏற்படுத்தும். அதில் அ.தி.மு.க.வினர் குளிர் காயட்டும் என்பதற்காக, தெரிந்தே திட்டமிட்டே இப்படி டோக்கன் கொடுக்கும் பொறுப்பு அதிமுகவினரிடம் அளிக்கப்படுகிறதா என்பதை முதலமைச்சர் பொது மக்களுக்கு விளக்க வேண்டும்.

 ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்டாலின் எச்சரிக்கை

அ.தி.மு.க.வினரைக் கொண்டு பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனே நிறுத்திட வேண்டும் என்றும்; அனைத்து ரேசன் குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி ஆகியவை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி ரேசன் கடை ஊழியர்கள் மூலம் மட்டுமே நடைபெற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பரிசு டோக்கன்

பரிசு டோக்கன்

அ.தி.மு.க.வினர் பொங்கல் பரிசு டோக்கன் வழங்குவதை முதலமைச்சர் உடனடியாகத் தடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

English summary
pongal Gift token distributed system Criticized by Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X