சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா வாகனங்களும் சென்னை நோக்கி.. நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பொங்கல் தொடர் விடுமுறைகளால் சென்னை மாநகரமே வெறிச்சோடி காணப்பட்டிருந்தது. பல லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு சென்றனர்.

Pongal Holidays: Heavy traffic at Trichy - Chennai Highway

பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பலரும் சென்னை திரும்புகின்றனர். இதனால் சென்னை வரும் நெஞ்சாலைகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை, மதுராந்தகம் சுங்க சாவடிகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் பல மணிநேரம் காத்து நின்றன. இதனையடுத்து சில இடங்களில் சுங்க சாவடிகளை கட்டணம் செலுத்தாமலேயே போலீசார் அனுப்பி வைத்தனர்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்... மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்... மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

இதேபோல் வேலூர், வாணியம்பாடி சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மிக கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைதான் ஏற்பட்டது. இதனால் சென்னை புறநகரில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கே பல மணிநேரம் ஆனது.

English summary
Chennai People returning home after spending Pongal holidays there was a surge in traffic on National and State Highways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X