சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உற்சாகம் பொங்கும் தமிழர் திருநாள்.. தமிழகம் முழுக்க பொங்கல் பண்டிகை.. மக்கள் கொண்டாட்டம்!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu people celebrates pongal | தமிழகம் முழுக்க பொங்கல் கொண்டாட்டம்

    சென்னை: தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பவர்கள். தை மகளை வரவேற்கும் விதமாக, விவாசாயிகள் சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் உழவர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை.

    Pongal: People in Tamilnadu celebrates their farmer festival

    வரலாற்று ரீதியாக தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே பொங்கலை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. தை மக்களை வரவேற்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மகள் வந்தால் போதும் வாழ்வு செழிக்கும், வளம் கொழிக்கும் என்பார்கள்.

    தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை போகியோடு தொடங்குகிறது. ஜாதி மதம் கடந்த தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

    தமிழர் மரபுகளை நினைவு கூறுவதும், பாரம்பரியத்தை நினைவு கூறுவதும், பழமையை நினைவு கூறுவதும் இந்த பண்டிகையின் முக்கிய நோக்கம் ஆகும். அதனால்தான் பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகை தமிழகம் மட்டும் இன்றி உலகம் முழுக்க வேறு நாடுகளில் இருக்கும் பிற தமிழர்களும் கொண்டாடுகிறார்கள்.

    பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையின் படி, போகியுடன் தொடங்குகிறது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை விவசாயத்தை கொண்டாடும் பண்டிகை ஆகும். தூரத்து சொந்த்தின் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு குடும்பமாக எல்லோரும் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல்.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் சங்கராந்தி உட்பட வெவ்வேறு பெயர்களில் பொங்கல் கொண்டாடுகிறார்கள். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பொங்கல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் அன்று சூரியனை வேண்டி மக்கள், பொங்கல் சமைத்தனர். விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு மக்கள் நன்றி செலுத்தினார்கள். ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

    சூரியனுக்கு இந்த உணவை படைத்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.வண்ண நிறங்களில் கோலமிட்டு, வீடுகளை அலங்கரித்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.

    அதன்பின் நாளை விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு மறுநாள் அன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படும். காணும் பொங்கல் அன்று மஞ்சள் தண்ணீர் தெளித்து மக்கள் கொண்டாடுவார்கள்.

    English summary
    Pongal: People in Tamilnadu celebrate their farmer festival in their own cultural way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X