சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் ஜன.25 வரை நீட்டிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபாடின்றி வழங்க ஏதுவாக 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் விடுமுறை நாள் தவிர பிற நாட்களில் வழங்க வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேசன்கடைகளில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றுடன் 100 ரூபாய் பரிசாக கொடுத்தார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. இதனையடுத்து 200 ரூபாயாக பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது.

Pongal prize of Rs. 2500 TN govt extention deadline till Jan. 25

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 2500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் காலம் என்பதால் பரிசுத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் வீடு வீடாக டோக்கன் தரப்பட்டது.

2500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடந்த 4ம் தேதி தொடங்கியது. 13ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதிகளில் பொங்கல் பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார்.

 தைவான் கீலுங் நகரில் இந்தியர்கள் விமரிசையாக கொண்டாடிய 'பொங்கல் பண்டிகை' தைவான் கீலுங் நகரில் இந்தியர்கள் விமரிசையாக கொண்டாடிய 'பொங்கல் பண்டிகை'

பல ஊர்களில் ரேசன் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வெளியூரில் வசிப்பவர்கள் நேரில் வந்து வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபாடின்றி வழங்க ஏதுவாக 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் விடுமுறை நாள் தவிர பிற நாட்களில் வழங்க வேண்டும் என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சுற்றிக்கை வெளியிட்டுள்ளார்.

ரூ. 2500 வாங்க முடியாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் ரேசன் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

English summary
The Commissioner of Food Supply and Consumer Protection has issued a circular stating that the Pongal gift package should be distributed to family cardholders on non-holiday days from 18th to 25th at fair price shops.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X